Thursday, 7 September 2017

படப்பிடிப்புக்கென பொய் கூறி ஆடுகள் திருட்டு .. வவனியாவில் கைவரிசை

virakesari.lk வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் சூட்சுமமான முறையில் ஆட்டுப்பண்ணை உரிமயாளரை ஏமாற்றி 15 ஆடுகள் திருடப்பட்ட சம்பவம் ஒன்று வவுனியா பொலிஸில் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
ஹயஸ் ரக வாகனமொன்றில் வந்த நபரொருவர் படப்பிடிப்பு நடாத்துவதற்கு ஆடுகளை தருமாறு கேட்க ஆட்டுப்பண்ணை உரிமையாளரும் சம்மதித்துள்ளார்.
உரிமையாளரிடம் இருபதினாயிரம் ரூபாவை கொடுத்துவிட்டு படப்பிடிப்பு நடக்கும் ஸ்தலத்திற்கு ஆடுகளை கொண்டு செல்ல வேண்டும் எனக் கூறி உரிமையாளரையும் தன்னோடு அழைத்துக்கொண்டு வவுனியா நோக்கி சென்றுள்ளார்.
செல்லும் வழியில் பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்திற்கு அருகிலுள்ள இராணுவ உணவுச் சாலைக்கு முன்னால் வாகனத்தை நிறுத்திய குறித்த நபர் உரிமையாளரிடம் 200 ரூபாவை கொடுத்து தனக்கு குளிர்பானம் வாங்கி வருமாறு கூறி வாகனத்தை விட்டு இறக்கியுள்ளார்.
உரிமையாளர் குளிர்பானத்தை வாங்கி கொண்டு வாகனம் தரித்து வைக்கப்பட்ட இடத்திற்கு வந்து பார்த்த போது வாகனத்தையோ குறித்த நபரையோ காணாத நிலையில் தான் திட்டமிடப்பட்டு ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் தனது ஆடுகள் கொள்ளையடிக்கப்பட்டதையும் உணர்ந்துள்ளார்.
பின்னர் உரிமையாளர் வவுனியா பொலிஸில் முறைப்பாட செய்துள்ளதையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...