Sunday, 3 September 2017
லன்ச் சீட் , சொப்பிங் பை ,ரிஜிபோம் உணவு பொதியிடல் பெட்டி நாளை முதல் தடை
நாளை தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் லன்ச் சீட் , சொப்பிங் பை மற்றும் ரிஜிபோம் உணவு பொதியிடல் பெட்டிகளின் உற்பத்தி, விநியோகம் மற்றும் பாவனை ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. இந்த சட்டத்தை மீறுவோருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் மற்றும் இரண்டு வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாவனைக்கு இலகுவாகவும் , மலிவாகவும ்கிடைக்கும் காரணத்தால் , அன்றாட வாழ்வில் பொலித்தீன் மற்றும் பிலாஸ்டிக் உற்பத்திகளை பயன்படுத்த அநேகமானோர் விரும்புகின்றனர். பொதுவாக நாளொன்றுக்கு ஒரு நபரால் 7 கிலோகிராம் பொலித்தீன் மற்றும் பிலாஸ்டிக் கழிவுப் பொருட்கள் அகற்றப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் தெரிவித்துள்ளது. அவற்றில் , லன்ச் சீட் மற்றும் சொப்பிங் பைகள் போன்ற உற்பத்திகளே பொதுமக்களிடம் இருந்து சூழலுக்கு அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நாட்டில் நாளொன்றுக்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான லன்ச் சீட்டுக்கள் பாவனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இவைகள் மக்கிப்போகாததால் சூழலுக்கு பாரியளவிலான பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்
கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...
-
ஒரு விதேச பெண்ணாக இலங்கை வந்து இலங்கைப் பெண்களுக்காக (குறிப்பாக மலையகப் பெண்களுக்காக) வாழ்ந்து மடிந்த ஒரே ஒரு தமிழ்ப் பெண்ணைத் தான் நா...
-
தேநீர் இலங்கையின் தேசிய பானம் என்றே கூறலாம். அந்தளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றிய ஒரு பானமாக தேநீர் காணப்படுகிறது. இது இலங்கைக்...
-
Malayaga Kuruvi !!!!...பகிரங்க வேண்டுகோள் 47 வது இலக்கிய சந்திப்பு மலையகம்..!!!! சமூக ஆர்வலர் Ratnasingham Annesley அவர்களின் வேண்டுகோளை...
No comments:
Post a Comment