Wednesday, 9 August 2017

ஆவா குழு அடக்கப்பட்டது ... 50 பேர்கை து ... யார் பின்னணியில் என்ற கோணத்திலும் ...



தினக்குரல் :  யாழ்ப்பாணத்தில்  இயங்கி வந்த " ஆவா' குழுவின் செயற்பாடுகள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அத்துடன், இந்தக் குழுவின் தலைவர் உள்ளிட்ட 12 முக்கிய உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், ஆவா குழுவுடன் தொடர்புடைய முக்கிய உறுப்பினர்கள் இருவர் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் அடங்குவதாகவும் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
தலைநகர் கொழும்பில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஆவா குழுத் தலைவர் என்று கூறப்படும், விக்டர் நிசா எனப்படும் நிசாந்தன் மற்றும் அவரது இரண்டு சகாக்களும் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. புறக்கோட்டை மற்றும் மட்டக்குளி பகுதிகளில் வைத்து ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் நான்கு பேரை பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்திருந்தனர். இவர்களில் ஆவா குழுத் தலைவர் என்று கூறப்படும், விக்டர் நிசா எனப்படும் சத்தியவேல் நாதன் நிசாந்தன் மற்றும் அவரது இரண்டு சகாக்கள் விசாரணைகளுக்காக பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ் கிரிகெட் வீரருக்கு இலங்கை அணியில் வாய்ப்பு!

வீரகேசரி :Vijithaa on 2017-08-09 13:03:19 கிளிநொச்சியைச் சேர்ந்த விளையாட்டு வீரருக்கு இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாட வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக வன்னி பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, பளையை சேர்ந்த 23 வயதுடைய வேகப்பந்து வீச்சாளரான செபஸ்ரியாம்பிள்ளை விஜயராஜின் திறமைகளை தொலைக்காட்சி ஒன்றின் மூலமாக அறிந்து கொண்ட வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், விஜயராஜை இன்று தனது அலுவலகத்திற்கு அழைத்து வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் மேலும் அவரது திறமைகளை வளர்த்துக்கொள்ளத் தேவையான வசதிகளையும் பயிற்சிகளையும் வழங்க முன்வந்துள்ளார்.

80 நாடுகளுக்கு இலவச விசா ; கட்டார் அரசாங்கம் அதிரடி அறிவிப்பு

வீரகேசரி : இலங்கை தவிர 80 நாடுகளின் குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவுகளை கட்டார் அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.: குறிப்பிட்ட பட்டியலில் இலங்கை,சவுதி,குவைட்,அமீரகம்,யெமென் போன்ற பல நாடுகள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.>இந்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, அவுஸ்ரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளது. கட்டாருக்கு வரவிரும்பும் இந்த 80 நாடுகளை சேர்ந்த பிரஜைகள் விசாவிற்கு விண்ணப்பிக்கவோ, பணம் கட்டவோ தேவையில்லை. கட்டாருக்கு விஜயம் செய்ய இந்த சலுகையைபெற வரையறை கிடையாது, பல முறை பயணம் மேற்கொள்ளவும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையக பெண்களும் சவால்மிக்கப் சுகாதாரப் பிரச்சனைகளும்


Esther Nathaniel  (வி.எஸ்தர்) : மலையகம் என்றதும் பெரும்பாலானவர்களுக்கு குறிப்பாக ஏனைய பிரதேசங்களில் வாழ்பவர்கள் மலைநரட்டை நல்லnhரு சுற்றுலா தளமாகத்தான் பார்க்கிறார்கள் .சிலுசிலுவென்று குளிரும் புதிதாக திருமணத்தில்  இணைந்தவர்கள் தெரிந்திருக்கும் தேனிலவு பிரதேசமாகவும் பாடசாலை மாணவர்களளுக்கான சுற்றுலா தளமாகவுமே மலைநாடு இன்றுப்பர்க்கப்படுகின்றது.
மலையகத்தில் தேயிலையும் இறப்பரும் பயிரிடப்படுகின்றமை யாவரும் அறிந்ததே. மேலும் பிரித்தானியர்களால் 1815 ஆண்டு கண்டி கைப்பற்றப்டடப்ப்pன்னர் மலைநாட்டை அவர்கள் ஒரு பெருநN;தாட்டத்தை மாற்ற  முனைந்து அதில் வெற்றிப் பெற்றனர். இவ்வெற்றிக்கும் பொருளாதார செழிப்புக்கும் பிண்ணனியில் மிகப்பெரிய மனிதத்துன்பியல் வரலாறு கடந்த 200 வருடங்களாக தொடர்கின்றது என்றால் அது மறுப்பதற்க்கு இல்லை.
மேலே நான் குறிப்பிட்ட தலைப்பை அணுகுவதற்கு முன் மலையகத்தின் சில வரலாறுகளை உங்கள் கண்முன் ஒரு வரலாற்று வரைபடத்தை விரித்துக்காட்ட விரும்புகின்றேன். தென்னிந்தியாவின் பண்ணைமுறை அடிமை வாழ்க்கையும் தென்னிந்தியா இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி உட்பட்ட பல்வேறு இடங்களையும் மிகவும் தாக்கிய பஞ்சம் நிலைப்பாடானது மனிதவளத்தை வெளிநோக்கித்தள்ளியது. மக்கள் வயிற்றுப்பிழைப்புக்காகவும் எங்கெயாவது தொழில் வேண்டிப் புறப்படலாம், என்ற மன நிலையை இவ் சந்தர்ப்பத்தை மிகவும் லாவகமாக ஏற்கனவெ தென்னிந்தியாவை முற்றுகையிட்டிருந்த  ஜரோப்பியருக்கு கையில் அல்வா கிடைத்தது போலிருந்தது. கரும்புத் தின்ன கைக் கூலி வேண்டுமா? என்ன!!
அவர்கள் மலேசியா, பிஜித்தீவுகள், தென்னாபிரிக்கா ,இலங்கை நாடுகளுக்கு தொழிலாளர்களை மிகமிக மலிவான கூலிக்காகக் தழிழ் தரகர்கள் மூலமாக பசப்பு வார்த்iகைளை அம்மக்களிடம் கூறி அவர்களை கொண்டு வந்தனர். இங்கே வந்தப் பின்னர்தான் வந்த பாருடா வழுக்கை பாதை  என்ற நிலையை அவர்கள் கண்டனர்.

Tuesday, 8 August 2017

வடக்கு ... ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் அனுமதிக்காத புத்தூர் கிராமம்

Mohana Dharshiny :வட கிழக்கு பிரதேசங்களில் சாதிய அடக்குமுறை அருகிவிட்டது என்போர் புத்தூர் கலைமதி கிராமத்திற்கு வந்து பார்க்கட்டும். இன்னும் ஒடுக்கப்பட்ட மக்களை கோயிலுக்குள் அனுமதிக்காத நிலைமை காணப்படுகின்றது. கலைமதி கிராமத்தில் அமைந்துள்ள ஞானவைரவர் கோயிலில் ஒடுக்கப்பட்ட மக்களை உள்நுழைய அனுமதிப்பதில்லை. 2000 ம் ஆண்டு காவடி தூக்கச் சென்ற மக்களை எச்சரித்து திருப்பி அனுப்பினர் ஆதிக்கசாதி பக்தர்கள். ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் காவடியை தூக்கிக்கொண்டு வெளியேறியதும் மஞ்சள்நீர் , சாணி தெளித்து கோயிலை "சுத்தப்" படுத்தி, விசேட பரிகார பூஜைகள் செய்ததாக அக்கிராம மக்கள் சொல்கின்றனர். அன்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பூட்டப்பட்ட வாயிற்கதவு இன்னும் திறக்கவில்லை. கோயில் கிணற்றில் தண்ணீர் எடுக்க தாழ்த்த ப்பட்ட சாதியினரை அனுமதிப்பதில்லை. அவர்களே வெளியிலுள்ள தொட்டியில் நீரை நிரப்பி வைத்தபின்னர் , தாழ்த்தப்பட்ட மக்கள் தொட்டியிலிருந்தே நீர் எடுக்க முடியும். தமிழ்தேசியவாதிகள் கண்களுக்கு இதெல்லாம் தெரிவதில்லை

மலையக வீரரான பிரின்ஸ் அந்தனி ஆசிய கராத்தே சம்மேளன நடுவராக தெரிவு

மலையக வீரரான பிரின்ஸ் அந்தனி ஆசிய கராத்தே சம்மேளன நடுவராக தெரிவு....!!!!!! கேகாலையைச் சேர்ந்தவரும் தற்போது கொழும்பில் பிரபல தனியார் அச்சக நிறுவனத்தின் உரிமையாளருமான கராத்தே மாஸ்டரான பிரின்ஸ் அந்தனி அவர்கள் அண்மையில் ஆசிய கராத்தே சம்மேளன நடுவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். கொழும்பு புனித ஜோசப் கல்லூரியின் பழைய மாணவரான இவர் சிறு வயது முதல் கராத்தே கலையை முறையாக கற்று இதுவரை 4 ஆவது கறுப்பு பட்டியைப் பெற்றுள்ளார். மலையக இளைஞர்களுக்கு தம்மால் முடிந்தவகையில் காரத்தே கலையைக் கற்று கொடுப்பதே தமது எண்ணம் என்றும் அவர் சொன்னார். விரைவில் மலையகத்தில் கராத்தே கலை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வுகளை மேற்கொள்ள எண்ணியுள்ளதாகவும் தெரிவித்தார். அவருக்கு மலையக குருவியின் வாழ்த்துக்கள்...!!

மனோ கணேசன் : நெருப்போடு விளையாடவேண்டாம் ... வடகிழக்கு அநியாயங்களை தட்டி கேட்டவன் நான்!

மலையக குருவி :நெருப்புடன் விளையாட வேண்டாம்...! Don't Play with Fire...!
நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசனின் முகநூலிலிருந்து...
வெளிநாட்டில் இருந்து அசிங்கமாக பிரதேசவாதம் பேசிய ஒருநபரின் முகநூல் கணக்கு உணர்வாளர்களின் முயற்சியால் முடிவுக்கு வந்துள்ளது. உண்மையில் முட்டாள்தனமாக உளறிய நபர் இங்கே பேசப்பட வேண்டியவர் அல்ல.
ஆனால், சமீப காலமாக மலையக தமிழர் தொடர்பில் வேறு பல்வேறு தரப்புகளில் இருந்து பாதகமான சமிக்ஞைகள் வருவது தமிழின ஒற்றுமைக்கு நல்லதல்ல. தமிழீழ விடுதலை புலிகளின் நிர்வாகத்தில் காணப்படாத பிரதேசவாதம் இப்போது எங்கே இருந்து தலை தூக்குகிறது?
பாரம்பரிய பிரதேசங்களை அடிப்படையாக கொண்ட மண்வாசனை வரலாறு என்பது பிழையானது அல்ல. தமிழினத்துக்குள் வடக்கு, கிழக்கு, மலையகம் என்ற வெவ்வேறு பாரம்பரிய மண்வாசனை வரலாறுகள் இந்நாட்டு தமிழரிடையே இருக்கின்றன.
இவை மண்வாதங்கள். மலைநாட்டில் வசீகர மலைக்குளிர் தென்றல் முகத்தில் வீசும். மட்டக்களப்பில் மீன் பாடும். வன்னியில் யானை பிளிரும். யாழ் குடா, தமிழ் கலாச்சார தொட்டிலாகும். இவை வேறு. பிரதேசவாதம் என்பது வேறு. இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ள கூடாது.

டிக்கோயாவில்கே ரள கஞ்சா .. நால்வர் கைது அட்டன் மதுவரி திணைக்கள அதிகாரிகள் ..

இருவேறு பகுதிகளில் 75000 ஆயிரம் மில்லி கிராம் கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது - நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன் இருவேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சா வைத்திருந்த நால்வரை அட்டன் மதுவரி திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 07.08.2017 மாலை டியோயா நகரப்பகுதியில் விற்பனை செய்யவிருந்த நிலையில் ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதனைத்தவிர திம்புள்ள பிரதேசத்தில் வெயாகொட பகுதியிலிருந்து நுவரெலியா சென்ற வேன் ஒன்றிலிருந்து ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் மூவர் கைது செய்ப்பட்டுள்னர். சுற்றிவளைப்பின் போது 75000 ஆயிரம் மில்லி கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட நால்வரையும் 08.08.2017. அட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிகை எடுத்துள்ளதாகவும் அட்டன் மதுவரிதிணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். மலையாக குருவி

வானொலி மேடை அறிவிப்பாளர் atm fazly காலமானார்.

பிரபல வானொலி அறிவிப்பாளரும் மேடை அறிவிப்பாளருமான atm fazly காலமானார். அன்னாரின் குடும்பத்தினருக்கு மலையக குருவி சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள்...!

தமிழ் ஊடகங்கள் மலையகத்தை புறக்கணிக்கிறது? வடகிழக்குக்கு கொடுக்கும் முக்கியத்துவம்?

Arun Wengadesh முகநூலில் இருந்து< மதிப்புமிக்க தமிழ் ஊடகங்களே…ஊடகவியலாளர்களே.. இலங்கையின் தமிழ் ஊடக வரலாறு என்பது மிக ஆரோக்கியமான பாதையின் வழி வந்த நகர்வாகும்.மலையகத்தின் ஆரம்ப கால அடிமை வாழ்க்கை மாற்றத்திற்கும்,மலையக மக்களின் விழிப்புணர்விற்கும் பத்திரிகைகள்,வானொலிகள்,தொலைக்காட்சிகள் பாரிய அளவில் பங்களிப்பு வழங்கி இன்றை சுதந்திர தமிழ் ஊடக தளத்திற்கு வழி செய்தது என்றால் மிகையாகாது.< ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் பாராட்டி புகழ்வதற்கு பல்வேறு கால கட்ட நிகழ்வகளின் பதிவுகள் உண்டென்றாலும் அது யாவரும் அறிந்ததே… ஆனால் இன்றைய கால கட்டத்தில் மலையகத்திற்கான ஊடகங்களின் பங்களிப்பு எவ்வாறானது என்பதை நாம் தெளிவுபடுத்திக் கொள்ளுதல் அவசியமாகிறது. பிரத்தியேகமாக மலையகத்திற்கான அச்சு ஊடகங்கள் சிறப்பான முறையில் இயங்கி வந்தாலும் தேசிய ரீதியில் மலையகத்தை அடையாளப்படுத்தும் ஊடகங்கள் மலையகத்திற்கான பங்களிப்பை சரிவர செய்கிறதா? என்பது கேள்விக்குறிதான். நானும் ஊடக துறை சார்ந்தவன் என்ற நினைப்போடும் இலங்கையின் மூத்த பத்திரிகையான வீரகேசரி பத்திரிகையில் குறுகிய காலத்தில் பல்வேறு விடயங்களை கற்றுக் கொண்ட மாணவன் என்கிற வகையிலும் எனது கருத்தை நேரடியாக கூற முடியும் என நினைக்கிறேன். என்னை பொருத்தவரை வீரகேசரி பணியில்தான் நான் அதிகமான விடயங்களை கற்றுக் கொண்டேன்.அங்கு தான் என ஊடக ஆசிரியர்கள் இருக்கிறார்கள்,அதே போன்று

Sunday, 6 August 2017

தேர்தலில் கஞ்சாக்காரர்களுக்கும் மாணிக்ககல் வியாபாரிகளுக்கும் இடமில்லை - பியதாச எம்.பி தகவல்

மலையக குருவி :(க.கிஷாந்தன்)
இந்த நாட்டில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐ.தே.காவில் போட்டியிட விண்ணப்பிப்போர் குற்ற செயல்களில் ஈடுப்படாதவர்களாக இருக்க வேண்டும். இதனை உறுதிப்படுத்த பொலிஸ் சான்றிதழ்கள் பெறப்பட வேண்டும் .இவ்வாறாக குற்றமற்றவர் என சான்றிதழ் இருக்குமாயின் அவர்கள் மாத்திரமே ஐ.தே.கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடமுடியும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அம்பகமுவ பிரதேச ஐ.தே.கட்சியின் பிரதான அமைப்பாளருமான கே.கே.பியதாஸ தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 40 வருடகால தொடர்ச்சியான அரசியல் செயற்பாட்டை கௌரவிக்கும் நிகழ்வு அட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் 06.08.2017 அன்று இடம்பெற்றது .
இந்த நிகழ்வை தலைமை தாங்கி உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க 1972ஆகஸ்ட் மாதம் 07ஆம் திகதி தனது அரசியல் வாழ்கைக்கு காலடி எடுத்து வைத்தார். அவர் இன்றுவரை நாற்பது ஆண்டுகளாக தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் அமைச்சராக எதிர்கட்சி தலைவராக மற்றும் பிரதமராக சேவை செய்து வருகிறார். இவர் ஆசியாவில் சிறந்த தலைவர் மற்றுமின்றி நமக்கும் நல்ல தலைவர் ஆவார்.
இவரின் தலைமையிலான ஐ.தே.கட்சி காலப்பகுதியில் மலையக பிரதேச கிராமங்கள், தோட்டப்பகுதிகள், நகரங்கள் என பாரிய அபிவிருத்திகள் முன்னேற்றம் அடைந்துள்ளது. அந்த வகையில் தோட்டப்பகுதி கல்வி முன்னேற்றம் பாடசாலை அபிவிருத்தி மலையக கல்வி கலாச்சாலைகள் என முன்னேற்றம் கண்டுள்ளது.

ஐ தே க ..ஒரு திருடர்கள் கட்சியல்ல ’’திருடர்கள் நீக்கப்படுவார்கள்’’ அட்டனில் ரணில் அறிவிப்பு


எஸ்.கணேசன், மு.இராமச்சந்திரன், ஆர்.ரமேஷ்) ஐக்கிய தேசிய கட்சி திருடர்களின் கட்சியல்ல. திருடர்கள் இருப்பார்களாயின் நீக்கப்படுவார்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை நிறைவையொட்டி வரவேற்பு நிகழ்வு ஹட்டனில் இன்று (06) இடம்பெற்றது. அதன் பின்னர் ஹட்டன் டி.கே.டபிள்யு மண்டபத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் பிரதமர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், ஊழல் புரிவதற்கு யாருக்கும் இடமளிக்கப் போவதில்லை. கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல்களை நாம் இனங்கண்டுள்ளோம். இன்று அமைச்சர் ஒருவரை அழைத்து நீதிபதி ஒருவர் கேள்வி கேட்கும் வகையில் காலம் மாறியிருக்கிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் அவ்வாறு நடந்ததா? நான் இச்சந்தர்ப்பத்தில் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். எமது அரசாங்கம் திருடர்களை பாதுகாக்காது. ஏதாவது தகவல் வெளிப்படுமாயின் அந்த அறிக்கையின் அடிப்படையில் தேடிப்பார்த்து நடவடிக்கை எடுக்கப்படும். இது திருடர்களின் கட்சியல்ல. திருடர்கள் இருப்பார்களாயின் நீக்கப்படுவார்கள் என்றார். தமிழ் மிரர்

கருணா : கிழக்கு தமிழ் மக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு துரோகம் செய்துள்ளது

கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் அரசியல் தலைமைகளின் ஏகாபத்திய போக்கை முறியடித்து கிழக்கு மாகாண சபையை தமிழ் மக்கள் கைப்பற்றவேண்டும். இதற்கு கிழக்கு அனைத்து தமிழ் மக்களும் அணிதிரளவேண்டுமென தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னனி கட்சி தலைவர் விநாயகமூர்தி முரளீதரன் (கருணா) தெரிவித்துள்ளார். தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னனி கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு கல்லடியில் உள்ள கட்சி தலைமையத்தில் இடம்பெற்றது இதன் போது ஊடகங்களுக்க கருத்து தெரிவிக்கையிலே கருணா அம்மான் இவ்வாறு தெரிவித்துள்ளார். தினக்குரல்

ரணில் விக்கிரமசிங்க .. ஹட்டன் மட்டக்களப்பு பஸ் சேவை ..40 வது ஆண்டு அரசியல் நுழைவு விழா!


40 ஆண்டு பாராளுமன்ற அரசியல் பிரவேசம் நிறைவையொட்டி வரவேற்பு நிகழ்வு ஒன்றுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், நாட்டின் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க இன்று அட்டன் நகருக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் 40 ஆண்டு பாராளுமன்ற அரசியல் பிரவேசம் நிறைவையொட்டி ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸவின் எற்பாட்டில் இந்த வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வாக அட்டன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்திலும், நீக்ரோதாரராம பௌத்த விகாரையிலும், அட்டன் ஜும்மா பள்ளிவாசலிலும் இடம்பெற்ற விசேட பூஜைகளில் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டார். அத்தோடு அட்டன் டிப்போவினால் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள அட்டனிலிருந்து மட்டகளப்பிற்கான பஸ் சேவையையும் ஆரம்பித்து வைத்தார். அதன்பின் மக்களை சந்திக்கும் முகமாக டீ.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்திலும் கலந்து கொண்டார். இந் நிகழ்விற்கு நாட்டின் பிரதமர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கே.கே.பியதாஸ, வடிவேல் சுரேஷ், லக்கி ஜெயவர்த்தன ஆகியோருடன் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.  தினக்குரல்

நிலாவரை கிணறின் மர்மங்கள் தெளிவாகியுள்ளது ... அடியில் மாட்டு வண்டிகள் 2



நிலாவரைக்கிணறு புதிர் அவிழ்ந்தது ! குடாநாட்டுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் முக்கியமாகச் சென்றுபார்த்து ஆச்சரியப்படும் இடமாக விளங்கும் புத்தூர், நிராவரைக் கிணறு, தன்னுள் பல மர்மங்களையும் அதிசயங்களையும் அடக்கி வைத்திருந்தது. அவற்றைக் கண்டறியும் வகையில், நூற்றாண்டு காலமாக உலகிலுள்ள பல நாடுகளிலிருந்து வந்த ஆராச்சியாளர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்கள். ஆனால், முழுமையான முடிவுகளைப் பெறமுடியவில்லை. அன்று, பிற்பகல் 2.30 மணி, 23 ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2016 ஆம் ஆண்டு. குடாநாட்டின் வெப்பநிலை 35 பாகை செல்ஸியஸைக் காட்டியது. ஆனால், குடாநாட்டில் மிகவும் ஆழமான பகுதியில், நீருக்கடியில் அதன் வெப்பறிலை 26 பாகை செல்சியஸ் எனப் பதிவாகியது. ஆம்! அன்றுதான் பல புதிர்களையும் இரகசியங்களையும் தன்னகத்தே கொண்டிருந்த நி​லாவரைக் கிணற்றின் ஆழம் அறியப்பட்டது. இலங்கை கடற்படையின் சுழியோடிகள், ரோபோக்களின் உதவியுடன் நிலாவரைக் கிணற்றின் ஆழத்தை அறியும் வண்ணம், சகல நவீன பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றியவாறு கிணற்றுக்குள் இறங்கினார்கள். கிணற்றுக்குள் 55.5 மீற்றர் (182 அடி)​ சென்றபோது, கீழ்மட்டம் தென்பட்டது. நன்றாக வளர்ந்த பனை அல்லது தென்னை மரம் சராசரியாக 90 அடி உயரம் வரை காணப்படும். அப்படிப் பார்த்தால், சராசியாக இரண்டு பனை அல்லது தென்னை மரங்களின் உயரம் கொண்டதாக இந்தக் கிணற்றின் ஆழம் காணப்படுகின்றது. கிணற்றின் அடிப்பாகத்தில் மூன்று மாட்டு வண்டிகள் காணப்படுகின்றன என்பது சுழியோடிகள் கொண்டுசென்று ரோபோக்கள் எடுத்த படங்களின் மூலம் தெரியவந்தது. ஒரு வண்டில் முற்றாகச் சிதைவடைந்த நிலையிலும் மற்றையவை மாட்டு வண்டிகள் என உருவத்தை அடையாளம் காணக்கூடியவாறும் காணப்படுகிறது. இந்த மாட்டு வண்டிகள் கிணற்றுக்குள் எவ்வாறு வந்தன அல்லது விழுந்தன என்பது தொடர்பில் எதுவித தகவல்களும் கிடையாது. வண்டில்களின் நிலையை வைத்துப் பார்க்கும்போது, இந்தச் சம்பவம், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றிருக்கலாம் என அனுமானிக்க முடிகிறது. ரோபோக்கள் செய்த ஆய்வில், கிணற்றின் ஆழமான இடங்களில் பல திசைகள் நோக்கி, குகைகள் போன்று பல சுரங்க வழிகள் காணப்படுகின்றன. இவற்றில் சில இடங்களில் வேகமானதும் சில இடங்களில் சாதாரணமானதுமான நீரோட்டங்கள் காணப்படுகின்றன என்பதும் தெரிய வந்துள்ளது.
நிலாவரைக் கிணற்றுக்குள் எலுமிச்சம்பழத்தைப் போட்டால், அதை சில மணிநேரத்தின் பின்னர், கீரிமலைத் தீர்த்தக் கேணியில் எடுக்கலாம் என சிறுவயதில் கேள்விப்பட்டதுண்டு. அதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பதை ரோபோக்களின் ஆய்வுகள் நிரூபணம் செய்கின்றன. ஏனெனில், கிணற்றில் இருந்து, பல திசை நோக்கிச் செல்லும் சுரங்கப்பாதைகளின் ஊடான நீரோட்டங்கள் காணப்படுகின்றன. கீரிமலைக் கேணியின் தென்கீழ் மூலையில், ஒருவர் உள்ளே நுழைந்து செல்லக்கூடிய அளவுக்கு குகை ஒன்று காணப்படுவதை இப்பொழுதும் பார்க்கமுடியும். அதனூடாகவே கேணிக்கு நல்ல தண்ணீர் வருகின்றது. இந்தக் குகைக்கும் நிலாவரைக் கிணற்றில் ரோபோக்கள் உறுதிப்படுத்திய குகைக்கும் இடையிலான நீரோட்டத்தொடர்பு இருப்பதை உய்ந்தறிய முடிகிறது.

Saturday, 5 August 2017

பேச மறந்தவை .. சுதந்திர இலங்கையின் 69 வருட நாடாளுமன்ற நிகழ்வுகளில்

Murugan Sivalingam :சுதந்திர இலங்கையின் 69 வருட நாடாளுமன்ற நிகழ்வுகளில் மலையக மக்களின் அடிப்படை அரசியல் கோரிக்கைகள் பலவற்றை எமது பிரதிநிதிகள் இன்று வரை முன் வைக்கவில்லை! உள்நாட்டு அரசியல் வாதிகளுக்கு மலையக மக்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகள் இன்றுவரை தெரியாது! பெருந்தோட்டப் பிரதேசங்களை கிராமமயப் படுத்த மறுக்கும் இன்றுவரையிலான உள்ளுராட்சி சட்டங்களை இந்தப் பதிவில் காட்டியுள்ளேன்.
(இத்தகவல் கண்டி சமூக அபிவிருத்தி மன்றத்தின் இணையத் தளத்தில் காட்டப்பட்டுள்ளது.) எமது தேசிய உரிமைகளில் அக்கறையுள்ளவர்கள் இக்குறிப்பை தங்கள் தகவலுக்காகப் பதிவு செய்து கொள்வது அவசியமாகும்

சுயமாக சிந்திப்பது பாவமா? ஏதாவது ஒரு தலைவனை அல்லது சாமியாரை நம்பி கண்ணை மூடுங்கள் சொர்க்கம் நிச்சயம் ?

சாமியார்கள் வழிகாட்டிகள் மகரிஷிகள் குருமகராஜிகள் பகவான்கள் பகவதிகள் அம்மாசாமியாரினிகள் எல்லாரும் எப்படியாவது மக்களை காப்பாற்றியே தீருவது என்று விடாப்பிடியாக முயற்சி செய்கிறார்கள். தாராளாமாக முயற்சி செய்யட்டும் .
உலகில் நடக்கும் கொலை கொள்ளைகளை எல்லாம் தடுத்து நிறுத்துவது என்ன நடைபெறக்கூடிய காரியமா?
சில கிரிமினல்கள் அகப்படுவார்கள் சிலர் அகப்படமாட்டார்கள். ஆனாலும் இயற்கையின் விஞ்ஞான விதி ஒன்று உண்டு அதில் எவரும் தப்ப முடியாது. ஊரையெல்லாம் ஏமாற்றுபவன் சொந்த வீட்டிலேயே ஏமாந்த கதையெல்லாம் உண்டு இந்த மாதிரி பித்தலாட்ட சாமிகளிடம் மக்கள் அதிக அளவில் ஈடுபடுகிறார்கள். இது உண்மையில் ஆராயப்பட வேண்டிய விடயமாகும். மிகவும் அறிவாளிகளாக படித்தவர்களாக ஏன் படு சுயநலவாதிகளாக இருப்பவர்கள்கூட இந்த மாதிரி முடிச்சவிழ்கி சாமியார் குருமார்களிடம் சிக்குப்பட்டு விடுகிறார்கள்.

 சுய சிந்தனை இல்லாமல் இருப்பது மிகவும் உயர்ந்த விடயமாக நமது மனதில் பதியப்பட்டு உள்ளது . சமயங்களும் கலாசாரம் என்று நாம் கூறிகொண்டிருக்கும் வாழ்க்கை முறையும் இந்த தவறை கால காலமாக செய்துவருகின்றன. சுயமாக சிந்திக்க தெரிந்தால் அவர்களை அடக்கி ஆளமுடியாதே?
குருமார்கள் நிலைத்து நிற்பதே மக்களின் அறியாமையினால்தான். மக்கள் உண்மையை அறியாதவாறு சாமிகளும் ஆசாமிகளும் பல விதமான ஒழுக்க விதிகள் கோட்பாடுகள் எல்லாவற்றையும் பாமர மக்களின் தலையில் திணித்து வைத்துள்ளன.

அக்கரைப்பற்று மாஜிஸ்திரேட் நீதவான் பீட்டர் போல் ஒரு மலைக்கொழுந்தின் மைந்தன்!

Malayaga Kuruvi : கொழுந்து பறித்த தாயின் வயிற்றில் உருவான முதலாவது நீதவான் தகவல் பகிர்வு - ஷான் சதீஸ் ''கொழுந்து பறித்த தாயின் வயிற்றில் உருவான முதலாவது நீதவான் நானே"என அக்கரைப்பற்று மாஜிஸ்திரேட் நீதவான் பீட்டர் போல் பெருமிதம்! எந்நிலை சென்றாலும் தன்னிலை மறவாத தன்னிகரில்லாத மண்ணின் மைந்தனை வாழ்த்துவோம்

அவுஸ்ரேலியாலில் இருந்து 13 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

அவுஸ்ரேலியாவிலிருந்து 13 இலங்கையர்கள் விசேட விமானமூலம் நாடுகடத்தப்பட்டனர். இவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு பண்டாரநாயக்கா சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவர்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக விமான நிலைய பொலிசார் தெரிவித்தனர். குறித்த 13 பேரும் நாட்டின் பல பாகங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் கடந்த 2012ம் ஆண்டு இலங்கையில் நீர்கொழும்பு , சிலாபம் போன்ற கடல் பகுதிகளில் இருந்தும் மற்றும் விமானமூலம் இந்தியாவிற்குச் சென்று அங்கிருந்தும் படகுமூலம் சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்குச் சென்றுள்ளனர். இவர்களை அவுஸ்ரேலியா பொலிசார் தடுப்பு முகாமில் தடுத்துவைத்துள்ள நிலையில் விசேட விமான மூலம் இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு நாடுகடத்தப்பட்டுள்ளதா பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. தினக்குரல்

நுவரெலியா கடும் பனிமூட்டம் .. வாகனங்கள் முன் விளக்குகளை ஒளிரவிட்டு கொண்டு செலுத்த வேண்டுகோள்

மு.இராச்சந்திரன், ஆ.ரமேஸ் நுவரெலியா பிரதேசத்தில் பெய்து வரும் கடும் காற்றுடன் கூடிய மழையால் அப்பிரதேசத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஹட்டன் - கொழும்பு மற்றும் ஹட்டன் - நுவரெலியா பிரதான மார்க்கங்களில் அதிக பனிமூட்டம் காணப்படுவதால், சாரதிகள் வாகனங்களின் முன் விளக்குகளை ஒளிரவிட்டு, வாகனங்களைச் செலுத்துமாறு, பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், பிரதான வீதிகளில் வழுக்கல் தன்மையும் ஏற்பட்டுள்ளது. இப்பிரதான வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்பட்டு, விபத்துகளைத் தவிர்த்துக்கொள்ளும்படி, நுவரெலியா பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழ் மிர்ரர்

கிளிநொச்சியில், யாழ் - கொழும்பு தனியார் பேருந்து கல்வித்திணை - களம் கண்டது

கிளிநொச்சியில், யாழ் - கொழும்பு அதி சொகுசு தனியார் பயணிகள் பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி வலயக் கல்வித் திணைக்கள அலுவலகத்தினுள் உட்புகுந்து விபத்துக்குள்ளாகி கிடப்பதைப் படத்தில் காணலாம். (படம்: கிளிநொச்சி குறூப் நிருபர் தமிழ்ச் செல்வன்)

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...