![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtu7GUi3fbjiBwa9B9TFBZ6IuIRAOJpT_8V9EQEIcULo5ir9k-E7kOqPupsI2oKKieShNSLHC8L1iS3iX_tSpdGruvL5ZE9krBN5EW6qFvFaB29-jTGkwvkbgOEX6SUQmUYvcyN04Cuyw/s400/20431627_10214101520441507_8285572633078012424_n.jpg)
ஞாயிற்றுக்கிழமை மாலை 5மணியளவில் இடம்பெற்றுள்ளது.< 23ஆம் திகதி காலையில் செல்லக்கதிர்காமத்தை அடைந்த குழுவினர் அன்று பிற்பகல் பறப்பட்டு கதிர்காமத்தை வந்தடைந்தபோது ஆலய முகப்பில் இந்த நாய் நின்றதைக்கண்டதும் அனைவரும் தமைமறந்து அரோகரா போட்டார்கள். அனைவரும் ஒருகணம் அதிர்ச்சியுற்றவர்களாகவிருந்தார்கள்.யாழ்ப்பாணம் செல்வச்சநந்நதி ஆலயத்திலிருந்து இவர்கள் பின்னால் தொடர்ந்து 10நாட்கள் பயணித்த இந்த நாய் முல்லைத்தீவு வற்றாப்பபளை கண்ணகை அம்மனாலய குளிர்த்திச்சடங்கின்போது காணாமல்போயிருந்தது.
அதன்பின்னர் அது இவர்களைப்பின் தொடரவில்லை. அவர்களும் அதனை அலட்டிக்கொள்ளவில்லை.
பின்னர் அவர்கள் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை ஊடாக காட்டுக்கள்பிரவேசித்து 41நாட்கள் பயணிக்கும்வரை அது பின்வரவில்லை.
பின்னர் அவர்கள் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை ஊடாக காட்டுக்கள்பிரவேசித்து 41நாட்கள் பயணிக்கும்வரை அது பின்வரவில்லை.
ஆனால் 42வது நாள் இவர்கள் கதிர்காமத்தை வந்தடைந்ததும் அவர்கள் ஏலவே கழுத்தில் கட்டியிருந்த அதே பட்டுத்துணியுடன் தென்பட்டது.
இது தொடர்பில் வேல்சாமி கருத்துரைக்கையில்:
இது ஒரு அற்புதம் என கருதுகின்றேன். எமக்கு காவலாக பாதுகாப்பாக முருகப்பெருமான் வைரவக்கடவுளை(நாயை) முல்லைத்தீவு வரை அனுப்பி பின்னர் இறுதிநேரத்தில் காட்சியளிக்கவைத்துள்ளார்.
உண்மையில் அந்த நாயைக்கண்டதும் எமக்கெல்லாம் மெய்சிலிர்த்தது. ஒரே இன்பஅதிர்ச்சியாகஇருந்தது. அதனுடன் ஆலயபிரகாரத்தில்வை த்து ஒரு படமும் எடுத்துக்கொண்டோம்.
எமது இவ்வருடத்திற்கான பாதயாத்திரையை முருகப்பெருமான் ஏற்றுள்ளான் என்பதே எமது கருத்தாகும். என்றார்.
பாதயாத்திரையிலீடுபட்ட அவுஸ்திரேலிய வென் கூறுகையில்;
பாதயாத்திரையிலீடுபட்ட அவுஸ்திரேலிய வென் கூறுகையில்;
இது எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத ஆனால் மிகவும் உணர்வுபூர்வமான சம்பவம். நாய் நன்றியுள்ள மிருகம் என்பதையறிவேன். ஆனால் இந்தளவு மோப்பசக்தியுடைய பிராணி என்பதை இன்றுதான்அறிந்தேன்.இது எப்படி முல்லைத்தீவிலிருந்து இங்கு வந்தது என்பதையறியேன். ஆனால் இது ஒரு அற்புதம் என்றார்.
பாதயாத்திரையீடுபட்ட யாழ்.இளைஞர் யாதவன் கூறுகையில்:
கதிர்காமத்தில் அந்த நாயைக்கண்டதும் எம்மால் எமது கண்களையே நம்பமுடியாமல்போய்விட்டது. முருகப்பெருமான் இதனை வழித்துணையாக முல்லைத்தீவு வரை அனுப்பினாரா என்று நினைக்கிறேன். எதுஎவ்வாறிருப்பினும் முல்லையிலிருந்து கதிர்காமம் வந்த நாயை நாம் எந்தவகையில் உள்ளடக்குவது? சிலருக்கு இது நகைப்பாக இருக்கலாம்.ஆனால் எமக்கு இதுவொரு மெய்சிலிர்த்த அனுபவம். கடவுள் இருக்கிறார் என்பதை மீண்டும் தெளிவுபடுத்தும் செய்றபாடு என்றார்.
குறிப்பு :
முதல் 2படங்களும் கதிர்காமத்தில் எடுத்தவை.
இறுதி 2படங்களும் சந்நதியிலிருந்து முல்லைத்தீவு வரை அந்த நாய்வந்தபோது எடுத்த படங்கள.
இரண்டையும் ஒப்பிட்டுப்பார்த்தால் இரண்டும் ஒரே நாய் என்பது புரியும்.
இரண்டையும் ஒப்பிட்டுப்பார்த்தால் இரண்டும் ஒரே நாய் என்பது புரியும்.
No comments:
Post a Comment