இந்தநிலையில் குறித்த சந்தேக நபருக்கு எதிராக 2016 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி வவுனியா மேல் நீதிமன்றில் வியபாலன் மஞ்சுளா என்ற பெண்ணை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாட்டுக்காக கடத்திய குற்றச்சாட்டுக்காக குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
2016 ஆண்டு மே மாதத்திலிருந்து குறித்த சந்தேக நபருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில் இடம்பெற்று வந்தது.
வழக்கு விசாரணைகளின் போது கடத்தப்பட்ட விஜயபாலன் மஞ்சுளா என்ற பெண்ணினுடைய தந்தை நாகரத்தினம் விஜயபாலன், தாய் விஜயபாலன் சாந்திமலர் ஆகியோர் சாட்சியமளித்திருந்தனர்.
இதன்போது தனது மகளை குறித்த நபர் வீட்டில் இருந்து இழுத்துச் சென்றதாக சாட்சியமளித்தனர்.
அத்துடன் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்களும் சாட்சியமளித்தனர். அதன் பின்னர் சந்தேக நபரும் சாட்சியமளித்திருந்தார்.
அவர் தனது சாட்சியத்தில் தான் தற்போது யாழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றி வருவதாகவும், தான் ஏற்கனவே விசேட புனர்வாழ்வு அளிக்கப்பட்ட நபர் எனவும் தெரிவித்திருந்தார்.
எதிர்தரப்பு விவாதம் முடிவுறுத்தப்பட்டதன் பின்னர் கடந்த 17ஆம் திகதி சந்தேக நபர் குற்றவாளியாக வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரனினால் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் தீர்ப்புக்கான குறித்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றவாளி ஏற்கனவே புனர்வாழ்வு பெற்றிருந்தாலும் அவருக்கு எதிராக சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு சட்டத்தின் அடிப்படையில் தண்டனை வழங்க வேண்டும் என கூறிய நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
வழக்கு விசாரணைகளை அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் நெறிப்படுத்தியிருந்தார்.
No comments:
Post a Comment