Thursday, 27 July 2017

தெஹிவளை களுபோவிலையில் "உங்களுக்காக அரச சேவை... 29/07/2017 - 8.30 முதல் 3.30 வரை

கொழும்பு தெஹிவளை களுபோவிலையில் "உங்களுக்காக அரச சேவை"> சனிக்கிழமை 29/07/2017 - 8.30 முதல் 3.30 வரை 'உங்களுக்காக அரச சேவை”என்ற தொனிப்பொருளில் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனின் வழிகாட்டலில் அமைச்சினால் நடத்தப்படும் மாபெரும் நடமாடும் சேவையின் 11 ம் நிகழ்வு தெகிவளை களுபோவில புத்தகோஷ மகா வித்தியாலய வளாகத்தில் எதிர்வரும் சனிக்கிழமை 29ம் திகதி காலை 8.30 மணி முதல் மாலை 3.30மணி வரை நடைபெறும்.

இந்த நடமாடும் சேவையின் மூலம் பின்வரும் அரச சேவைகளை பொதுமக்கள் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்: பிறப்புச் சான்றிதழினை சட்டரீதியாக மொழி பெயர்த்துக் கொடுத்தல் (ஆங்கிலம்/சிங்களம்/தமிழ்) /பிறப்புச் சான்றிதழில் உள்ள பிழைகளை (பெயர்/தந்தையின் பெயர்/தாயின் பெயர்/பிறந்த இடம்) அடையாளம் கண்டு அவற்றைத் திருத்திக் கொடுத்தல்/ பிறப்பு சான்றிதழின் புதிய பிரதியை வழங்குதல் /பிறப்பு சான்றிதழ் இல்லாதவர்களுக்கு அனுமான சான்றிதழ் வழங்குதல் /


 தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் / ஊழியர் சேமலாப நிதித் தொகை விசாரணைகள் கடன் வசதிபெற்றுக் கொள்ளல் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல். ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வு / விவாகமாகாத தம்பதியினரை சட்டபூர்வமாக விவாகம் செய்து வைத்தல்./ சட்ட உதவி ஆணைக்குழு மூலமாக இலவசமாக சட்ட உதவி> இழப்பீடு> பிணை> பராமரிப்பு> தொழிலாளர் மோதல்> சிறைச்சாலை கைதிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு உதவி பெறல் வரிப்பணம் நகர்ப்புற வீட்டு வசதி வாடகை தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வு /

அடிப்படை உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வு / நீர் மற்றும் மின்சாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வு இந்த நடமாடும் சேவையில் பின்வரும் அரச நிறுவனங்கள் கலந்துக்கொள்ளும்: அரசகரும மொழிகள் திணைக்களம்/ அரசகரும மொழிகள் ஆணைக்குழு /பிறப்பை பதிவு செய்யும் பதிவாளர் நாயகம் திணைக்களம் /ஆட்பதிவுத் திணைக்களம் /ஊழியர் சேமலாப நிதி காரியாலயம்/ஓய்வூதியத் திணைக்களம் /பொலிஸ் திணைக்களம்/இலங்கை மத்திய வங்கி /தெஹிவளை – கல்கிஸ்ஸ மாநகர சபை /சட்ட உதவி ஆணைக்குழு/மனித உரிமைகள் ஆணைக்குழு /தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை /இலங்கை மின்சார சபை /தெஹிவளை பிரதேச செயலகம் /கொழும்பு மாவட்ட செயலகம்

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...