Tuesday, 25 July 2017

சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் அரசியல் வருகைக்கு வாழ்த்துக்கள்

நான் அரசியலில் பிரவேசித்த நாள் முதல் என் தந்தையின் அன்பு சொந்தங்களுடனான தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதில் ஆர்வமாக இருந்தேன், என் சொந்தங்களை அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று காண்பதனாலும் அவர்களின் அன்பினாலும் திளைத்து இருந்தேன் என்பதே நிதர்சனம். இதனாலேயே நான் அமைதியாக இருப்பது போல் தெரிந்திருக்கலாம் அதிலும் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை. அன்பின் முன் எதுவும் பெரிதல்ல. எங்கோ ஒரு மலைதோட்டத்தில் உள்ள அம்மா கண்ணீர் மல்க " எங்க அண்ணன்ட மகளா " என தழுவுவதில் கிடைத்த வெற்றி தேர்தலில் கிடைக்குமா..! மேலும் என் உறவுகளின் பிரச்சினைகளை சரிவர புரிந்து கொண்டதன் விளைவாகவே "#சந்திரசேகரன்_அறக்கட்டளை " ஆரம்பிக்கப்பட்டது.. வெளியில் இருந்து பார்க்கும் போது நம்மவர்க்கு சம்பளபிரச்சினை, தனிவீடு இன்னும் ஊடகங்களில் கூறப்படும் சில மட்டுமே பாரிய பிரச்சினையாக தெரியும் ஆனால் நம்மவர்களுடன் கலந்துரையாடும் போது தான் இன்னும் பலதரப்பட்ட கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என விளங்கியது. நிச்சயமாக உங்களுக்கான தேவைகளை நான் இயன்ற வரை பூர்த்தி செய்வேன்.
அதற்கு பலனாக வாக்குகள், மாலை, பொன்னாடை என்பவற்றை விட பலமடங்கு மதிப்பான உங்களது அன்பு போதும். #சந்திரசேகரன்_அறக்கட்டளை

Malaiagath Thamizhan மலையக மக்கள் முன்னணியின் நிறுவனர் சந்திரசேகரன் அவர்களின் மகள் சட்டத்தரணி அனுஷா தொழிற்சங்க அரசியலில் கால் பதிக்க முன்வந்துள்ளது மகிழ்ச்சி தரும் தகவல். மலையகத்தின் மகளிர் அரசியலில் ஆர்வமுள்ளவர்கள் என்பதை அறிந்த ஸ்ரீரெங்கா ஜெயரட்ணம் நமது பெண் சகோதரிகளில் சிலரை (சுமார் 12 பேர் என ஞாபகம்) அரசியலில் அறிமுகப் படுத்த முயன்றார். சரியான முன்னெடுப்பு இல்லாதபடியால் நமது சகோதரிகள் மேக்-அப் நிலையங்களிலேயே கேவலப் பட்டதே எஞ்சியது. அனுஷா படித்தவர், ஓரளவு வெளியுலகம் தெரிந்தவர் என்பதால் மக்கள் சேவை செய்ய முயல்வது வெற்றி தர வாய்ப்புகள் அதிகம். இன்று தெருவுக்குத் தெரு, சந்திக்கு சந்தி நமது மக்கள் பேசிக்கொள்ளும் “இந்திய அரசு அன்பளிப்பாகத் தந்த அந்த 40 பேருந்துகளுக்கு நடந்தது என்ன?” , “மக்களிடம் அங்கத்துவப் பணமாகப் பெற்று அதை முதலீடு செய்து கட்டிய இதொகாவின் கொழும்பு அலுவலகக் கட்டிடம் யார் பெயரில் பதிவாகியுள்ளது? அந்தக் கட்டிடங்கள் மூலம் கிடைக்கும் வாடகைப் பணம் எங்கு வைப்பிலிடப் படுகிறது?” போன்றவை என்பதை நாமறிவோம். சட்டத்தரணி என்பதால் அனுஷா தனது சட்ட அறிவைப் பயன்படுத்தி மேலே குறிப்பிடப் பட்டுள்ள சந்தேகங்களைத் தீர்க்க முயன்றால் மக்கள் அறிமுகம் சிறப்பாக அமையும். மக்கள் பூமாலை அணிவித்து ஆரத்தி எடுத்து ஏற்றுக் கொள்ளுவார்கள். நண்பர்கள் தங்கள் பரிந்துரையைப் பதிவிடுங்கள்

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...