Tuesday, 25 July 2017

தமிழ் தினப் போட்டியில் டயகம மாணவன் வினுஷகாந் விகாசன் அகில இலங்கை சாதனை!

மலையக குருவி : - அக்கரப்பத்தனை நிருபர் அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட தமிழ் தினப் போட்டியில் முதல் முறையாக நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் மூன்று நு/டயகம மேற்கு 02 தமிழ் வித்தியாலயத்தில் தரம் 05இல் கல்வி பயிலும் வினுஷகாந் விகாசன் அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட ஆக்கத்திறன் போட்டியில் முதலாம் பிரிவில் போட்டியிட்டு மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார். அண்மைக் காலமாக இப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சி அனைவரையும் போற்றத்தக்க அளவு முன்னேற்றம் கண்டுள்ளது. இதுதொடர்பாக பாடசாலை அதிபர் வேலுசாமி கோபால்ராஜ் தெரிவிக்கையில், இந்தப் பாடசாலையில் அதிகமான குறைபாடுகள் காணப்படுகின்ற போதிலும் இங்கு கடமையாற்றும் ஆசிரியர்கள் நேரகாலம் பாராமல் உணர்வுபூர்வமாக செயல்படுவதால் மாணவர்களின் கல்வி மட்டம் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவித்தார். ஆசிரியர்களின் முயற்சிகளின் மூலம் தரம் 05 புலமைபரிசில் பரீட்சை, தமிழ் தினப் போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் கலந்துகொண்டு சாதனை படைத்து வருகின்றனர். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வளங்கள் மிகவும் முக்கியம். எங்களுடைய பாடசாலைக்குத் தேவையான வசதிகள் கிடைத்தால் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு மேலும் வாய்ப்பாக அமையும். இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது மாணர்வகளுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...