Wednesday, 19 July 2017

யாழ்ப்பாணத்தில் "கண்டிச்சீமையிலே" நூல் அறிமுக விழா

கவிஞரும் சமூக ஆய்வாளரும் மொழி பெயர்ப்பாளருமான சட்டத்தரணி இரா. சடகோபனின் கைவண்ணத்தில் உருவான கோப்பிக்கால வரலாற்று ஆவண நூலான கண்டிச் சீமையிலே நூல் அறிமுக விழா 05.06.2016 ஞாயிற்றுக்கிழமையன்று யாழ்ப்பாணத்தில் இல. 62, கே.கே.எஸ்.வீதி, கொக்குவில் சந்தி, கொக்குவில் என்ற முகவரியில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கிய பேரவை, கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் காலை 10 மணிக்கு தே.க.இ.பே. யாழ் பேரவை செயலாளர் மு.இராசநாயகம் அவர்களின் தலைமையில் இடம்பெறும்.
பாராளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான கௌரவ எம். திலகராஜ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கும் இந்நிகழ்வில் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தலைவர் சாஹித்திய ரத்னா தெளிவத்தை ஜோசப் விமர்சன உரையையும், வரவேற்பு மற்றும் அறிமுக உரையை சோ.தேவராஜா (தே.க.இ.பே), நன்றி உரையை இரா.யோகமலர் (தே.க.இ.பே) ஆகியோர் நிகழ்த்துவர். நூலாசிரியர் இரா. சடகோபன் ஏற்புரையை நிகழ்த்துவார்.1820களில் தமிழ் நாட்டின் பல கிராமங்களில் இருந்தும் பஞ்சம் பிழைப்பதற்காக லட்சக்கணக்காக கூலிகள் இலங்கைக்கு வந்து சுமார் 130 மைல் தூரம் கால் நடையாக கண்டியை சென்றடைந்த போது சென்ற வழியிலும் கண்டிச்சீமையிலும் சொல்லொண்ணாத்துயரங்களை அனுபவித்து லட்சக்கணக்கில் செத்து மடிந்து இந்நாட்டின் மலைச்சாரல்களில் மண்ணோடு மண்ணாகி கோப்பிச்செடிகளுக்கடியில் புதைந்து போன கண்ணீர்க்கதையைக்கூறும் நூல்தான் இது.

வர்களின் இந்த அவல வரலாற்றை அங்குலம் அங்குலமாகக் கூறும் கண்டிச்சீமையிலே என்ற இந்த வரலாற்று ஆவணத்தை கட்டாயம் ஒவ்வொரு தமிழ்க்குடி மகனும் வாசித்துத்தெரிந்து கொள்ளக்கடமைப்பட்டுள்ளான்.
352 பக்கங்களில் A4 வடிவத்தில் 190 வரலாற்றுக்கால படங்களை உள்ளடக்கி எல்லாப்பக்கங்களும் 2 வர்ணங்களில் மின்னும் காகிதத்தில் வீரகேசரி நிறுவனத்தால் அச்சுப்பதிக்கப்பட்டுள்ள துன்பியல் காவியமான இந்நூல் ரூ.1800/= விலை குறிக்கப்பட்டுள்ள போதும் இப்போது 1000/= ரூபாவாக விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளது. ஆர்வலர்கள் இச்சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

இரா.சடகோபன்
0777- 679231


(நூல் வாங்க விருப்பமுள்ளவர்கள் அறியத்தரவும். நூல்கள் கொண்டுவருவதற்கு வசதியாக இருக்கும்.)  namathumalyakam.com

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...