நுவரெலியா மாவட்டத்தில் 3496 குடும்பங்கள் மிக அவதானமாக இருக்கவேண்டுமென தேசிய கட்டிட அமைப்பு சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அச்சபையினர் மேலும் கூறுகையில்;
தற்போது நாட்டில் உள்ள 9 மாவட்டங்களில் 14,680 குடும்பங்கள் அபாய வலயங்களில் உள்ளன. இனங் காணப்பட்ட நுவரெலியா மாவட்டத்தில் 3496 குடும்பங்களும் கண்டி மாவட்டத்தில் 1292 குடும்பங்களும் மாத்தறை மாவட்டத்தில் 2010 குடும்பங்களும் பதுளை மாவட்டத்தில் 5418 குடும்பங்களும் கேகாலை மாவட்டத்தில் 824 குடும்பங்களும் களுத்துறை மாவட்டத்தில் 929 குடும்பங்களும் இரத்தினபுரி மாவட்டத்தில் 757 குடும்பங்களும் மற்றும் மாத்தறை மாவட்டத்தில் 591 குடும்பங்களும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 343 குடும்பங்களும் மிகவும் அபாயகரமான இடங்களில் வசிக்கின்றன.
அதிகளவு மழை பெய்யும் காலத்தில் இவர்களின் குடியிருப்புகள் நீரில் மூழ்க வாய்ப்புண்டு. ஆகையால் இவர்களுக்கு பாதுகாப்பான இடங்களில் குடியிருப்புகள் உடனடியாக அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும் என்றா
No comments:
Post a Comment