Thursday, 20 July 2017

மலையகத்தில் 1800 பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்படும் அமைச்சர் பி;.திகாம்பரம் தெரிவிப்பு.

(க.கிஷாந்தன்) மலையக குருவி :
மலையகத்தில்  1800 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்திருக்கிறேன். இந்த காணியுறுதிப்பத்திரங்கள் 7 பேர்ச்சர்ஸ் காணியுடன் வீட்டுரிமையும் கொண்டது. இதுவரை எந்தவொரு தலைவரும் இவ்வாறு அதிகாரமிக்க உறுதிப்பத்திரங்களை பெற்றுக்கொடுக்கவில்லை என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
அட்டன் அபோட்சிலி ஆனைத் தோட்ட மக்களுக்கு பசும் பொன் வீடமைப்பு திட்டத்தின் கீழ் 20 தனி வீடுளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா, மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் தலைமையில் 20-07-2017 அன்று இடம்பெற்றது.
அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதற்கு முன்பு இருந்தவர்கள் காகிதத் தாளில் மட்டும் தான் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்திருந்தார்கள். இன்று நாங்கள் அதனை மாற்றியுள்ளோம். இந்த காணியுறுதிப்பத்திரத்தினை வங்கியில் வைத்து உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். நுவரெலியா மாவட்டத்தில் சுமார் 2 இலட்சம் பேருக்கு 5 பிரதேச சபைகள் மாத்திரம் தான் இருக்கின்றன. இதனால் கந்தப்பளையில் உள்ளவர் தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள நுவரெலியா பிரதேச சபைக்கு வர வேண்டும். இதனை மாற்றுவதற்கு நாங்கள் பாராளுமன்றத்தில் பேசி நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இன்று நாம் அரசியல் ரீதியாக ஒன்றுபட்டதன் காரணமாக பாராளுமன்றத்தில் ஆறு உறுப்பினர்களை கொண்டுவர முடிந்தது. அரசியல் ரீதியாக பலத்தினை நிருபித்த நாம் தொழிற் சங்க ரீதியாக இணைந்து பலத்தினை நிருபிக்க வேண்டும்.
இது தொடர்பாக நாங்கள் தற்போது அமைச்சர் ராதாகிருஸ்ணனுடனும், அமைச்சர் மனோகணேசனும் பேசி வருகிறோம். இன்று ஒரு சிலர் அமைச்சுக்கு வருகை தந்து எனக்கு வீடு வேண்டும் என்று தெரிவித்து வருகிறார்கள். ஒரே நாளில் ஒரு லட்சத்து அறுபதாயிரம் பேருக்கும் வீடு கட்டி கொடுக்க முடியாது. அதற்கு காணிகள் பெறவேண்டும் நிதி பெற்றுக்கொள்ள வேண்டும். அதனை உணர்ந்து அனைவரும் பொருத்திருந்தால் சகலருக்கு கிரமமாக வீடுகளை கட்டிக் கொடுப்பேன். எனவே எதிர்காலத்தில் பல நல்ல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு நாம் உத்தேசித்துள்ளோம். அதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...