Wednesday, 16 August 2017
நுவரெலியா ...சுற்றுலா பஸ் பள்ளத்தில் வீழ்ந்ததில் 21 பயணிகள் படுகாயமடைந்தனர்
பத்தனை நிருபர் : கதிர்காமத்திலிருந்து, நுவரெலியா வலப்பனை வழியாக மிஹிந்தலை நோக்கி பயணித்த தனியார் சுற்றுலா மினி பஸ் ஒன்று வலப்பனை நுவரெலியா பிரதான வீதியில் மாஹாஊவாபத்தன பகுதியில் குடைசாய்ந்து பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.
மிஹிந்தலை பகுதியிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு கதிர்காமத்திற்கு சென்று மீண்டும் மிஹிந்தலைக்கு செல்லும் வழியிலேயே குறித்த பஸ் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் பாதையைவிட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்த 21 பேர் படுகாயமடைந்தனர்.
சீரற்ற காலநிலை காரணமாகவும் பஸ் சாரதிக்கு தூக்க கலக்கம் ஏற்பட்டதன் காரணமாகவும் இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரிய
வந்துள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்த 21 பேரில் 15 பேர் நுவரெலியா ஆதார வைத்தியசாலையிலும் 6 பேர் வலப்பனை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தினக்குரல்
தேயிலை 150 வருட கொண்டாட்டங்கள் ஒரு தொழிலாளியும் அழைக்கப்பட்டிருக்கவில்லை.
இலங்கையில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு 150 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு இலங்கை முழுவதிலும் தேயிலை சபையினாலும் இலங்கை அரசாங்கத்தினாலும் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்தக் கொண்டாட்டங்களில் ஒரு தொழிலாளியேனும் அழைக்கப்பட்டிருக்கவில்லை. 150 வருடகாலமாக அவர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வுகள் காணப்படவில்லை, தீர்வு காணுவதற்கு யாரும் முன்வருகிறார்களில்லை. இதனை வௌிப்படுத்தும் முகமாக கார்டூனிஸ்ட் Pradeepkumar Rc வரைந்திருக்கும் கேலிச்சித்திரம் கீழே தரப்பட்டிருக்கிறது.
Monday, 14 August 2017
மகிந்த வெளியேறுகிறார்; பொதுஜன முன்னணியில் இணைகிறார்
22 சு.க. எம்.பி.க்கள் இலங்கை பொதுஜன முன்னணி உறுப்புரிமையை ஏற்றுக் கொள்ளவிருப்பதாக இதுவரை உறுதிப்படுத்தியிருப்பதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் அவர்கள் உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்வார்கள் என அவர் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் புதிய அரசியல் கட்சியின் உறுப்புரிமையை ஏற்றுக்கொள்ளவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
Saturday, 12 August 2017
அவசர அவசரமாக புது ஒரு தேர்தல் முறைமையை அறிமுகம் செய்து நடத்த முடியாது! Mano Ganesan
மலையாக குருவி : மனோ கணேசன்: சப்பிரகமுவ, கிழக்கு, வடமத்திய மாகாணசபைகளின் ஆயுட்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வருகிறது. இந்த சபைகளுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட வேண்டுமென்ற 20ம் திருத்த யோசனையை கைவிட வேடும் என்றும், தேர்தல்கள் ஒத்திவைக்கப்படாமல் நடத்தப்பட வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்துள்ள முடிவுகளை நாம் வரவேற்கிறோம் என ஜனநாயக மக்கள் முன்னணி-தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.
இதுபற்றி அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
இந்த ஒத்திவைப்பு அவசியமற்றது. ஒத்திவைக்க அரசியலமைப்பை திருத்த வேண்டும்.
இது நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதைவிட புதிய அரசியலமைப்பை கொண்டு வரலாம். அதற்கு இன்னும் சிறிது காலம் எடுக்கும். ஆகவே உரிய வேளையில் சப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய மாகாணசபைகளின் தேர்தல்களை நடத்துவதே சாலச்சிறந்தது. ஆனால், அதை அவசர அவசரமாக புது ஒரு தேர்தல் முறைமையை அறிமுகம் செய்து நடத்த முடியாது.
இது நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதைவிட புதிய அரசியலமைப்பை கொண்டு வரலாம். அதற்கு இன்னும் சிறிது காலம் எடுக்கும். ஆகவே உரிய வேளையில் சப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய மாகாணசபைகளின் தேர்தல்களை நடத்துவதே சாலச்சிறந்தது. ஆனால், அதை அவசர அவசரமாக புது ஒரு தேர்தல் முறைமையை அறிமுகம் செய்து நடத்த முடியாது.
அட்டனில் மாவா போதை பொருள் தயாரிப்பு நிலையம் சுற்றிவளைப்பு!
அட்டனில் மாவா போதை பொருள் தயாரிப்பு நிலையம் சுற்றிவளைப்பு!
மாவா மற்றும் என்.சி டின்கள் மீட்பு!!
- நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்
மாவா போதை பொருள் மற்றும் என்.சி புகையிலை டின்கள் ஒருதொகை கைப்பற்றியதுடன் அதனோடு தொடர்புடைய 6 பேரை கைதுசெய்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
அட்டன் பேருந்து திரப்பிட பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் சட்டவிரோதமாக மாவா போதை பொருள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே 12.08.2017 மதியம் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
சுற்றிவளைப்பின் போது 75 என்.சி.புகையிலை டின்கள் உட்பட சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டு 80 பக்கட்டுகளில் பொதிசெய்யப்பட்ட ஒருதொகை மாவா போதை பொருள் மற்றும் தயாரிப்பிற்கான பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் உட்பட போதை பொருளை பணம் கொடுத்து வாங்கிய 5 இளைஞர்களுமாக 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவுசெய்து அட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். malaiyakuruvi
Friday, 11 August 2017
இது தான் நல்லாட்சி அரசு! நாடாளுமன்றத்தில் பெருமைப்பட்ட ரணில்
ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவியில் இருந்து விலகிக் கொண்டமையானது வரவேற்கத்தக்கது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் எடுத்த முடிவினை வரவேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர்,
அமைச்சுப் பதவியிலிருந்து ரவி கருணாநாயக்க விலகியிருப்பது ஒரு எடுத்துக்காட்டாகும்.
கடந்த ஆட்சியில் எவரும் இவ்வாறு பதவி விலகவில்லை. எனக்கு எதிராக சோதனை முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணைகளை இலகுபடுத்துவதற்காக அமைச்சர் ரவி பதவி விலகியிருப்பது நல்லாட்சியை உறுதிப்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் ரவி கருணாநாயக்க மீது மத்திய வங்கி பிணைமுறிகள் தொடர்பில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, கூட்டு எதிர்க் கட்சியினர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினை கொண்டுவருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டனர்.
எனினும் அமைச்சர் தான் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருந்தார்.
முன்னதாக, அமைச்சர் மீதான இந்தக் குற்றச்சாட்டினால் அரசாங்கம் நெருக்கடியில் இருப்பதாகவும், எனவே அமைச்சரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. dinakaran
பொது இடங்களில் குப்பைக் கொட்டிய 160 பேர் கைது
தமிழ் மிரர் : கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்தப் பகுதிகளில், பொது இடங்களில் குப்பை கொட்டிய 160 பேரை கடந்த இரு தினங்களில் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இராணுவத்தினருடன் இணைந்து பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போதே மேற்படி 160 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைவாக, நுகேகொடயில் 40 பேரும் கொழும்பு மத்தி 34, கொழும்பு வடக்கில் 20 பேர்; கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கம்பஹா பகுதியில் 18 பேரும், களனி பிரதேசத்தில் 13 பேரும், கொழும்பு தெற்கில் 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த நபர்களுக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
தெமொதரை கல்குவாரியில் விபத்து பிரான்ஸ் படுகாயம்
தினக்குரல் : கற்குவாரியில் ஏற்பட்ட வெடிப்பால், பிரான்ஸ் நாட்டுப் பிரஜையொருவர் படுங்காயம்<
- க.கிஷாந்தன்
எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் தெமோதரயிலுள்ள கற்குவாரியில் ஏற்பட்ட வெடிப்பால், பிரான்ஸ் நாட்டுப் பிரஜையொருவர் படுகாயமடைந்த நிலையில் 10.08.2017 அன்று மாலை பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவ் வெடிப்பு சம்பவம் 10.08.2017 அன்று மாலை இடம்பெற்றுள்ளதாகவும், சாலி ரொப்ரோ (வயது 24) என்பவரே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.<
மேற்படி பிரான்ஸ் பிரஜையுடன் பயணஞ் செய்த பெண் ஒருவரும் அதர்ச்சியடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.<
மேற்படி கற்குவாரியில் வைக்கப்பட்ட வெடிபொருள் வெடித்ததால், பாரிய கல்லொன்று சுமார் 300 மீற்றர் தொலைவில் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன், அக்கல்லானது, கற்குவாரிக்கு அருகில் மோட்டார் சைக்களில் பயணித்துக்கொண்டிருந்த மேற்படி நபர் மீது பட்டதால், அவர் காயமடைந்துள்ளதாக, விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்தனர்.
கற்குவாரியில் ஏற்பட்ட வெடிப்பால், அருகிலிருந்து தேயிலை தொழிற்சாலை அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளும் சேதமடைந்துள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ஐரோப்பாவில் தமிழ்”மாநாட்டு ஆய்வுகளில் மங்கோலிய மொழிக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு ..
Subashini THF :ஐரோப்பிய ஆய்வாளர்களில் குறிப்பிடத்தக்க வகையிலான தமிழ்ப்பணிகளைச் செய்து கொண்டிருக்கும் தமிழறிஞர்கள் சிலர் இருக்கின்றனர். செக் நாட்டின் தலைநகரான அழகிய ப்ராக் நகரில் அமைந்துள்ள சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் இயங்கும் தென்கிழக்காசிய, மத்திய கிழக்காசியத்துறையின் தலைவராகவும் அதே கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தவரும் எனது இனிய நண்பருமான மறைந்த பேராசிரியர் வாச்சேக் அவர்களும் அந்த வரிசையில் ஒருவராக இடம்பெறுகின்றார்.பேராசிரியர் முனைவர் வாச்சேக் அவர்கள் 1943ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் தேதி பிறந்தார். செக் நாட்டில் கல்வி கற்று பின்னர் தமிழகம் வந்து மதுரையில் தமிழ் கற்றார்.
அவருடைய பெயரை அவ்வப்போது நான் கேள்விப்பட்டிருப்பினும் முதன் முறையாக நான் அவரை நேரில் பார்த்து உரையாடும் சந்தர்ப்பம் எனக்கு 2015ம் ஆண்டு கிட்டியது. 2015ம் ஆண்டில் பாரீசில் நடைபெற்ற ”ஐரோப்பாவில் தமிழ்” என்ற அனைத்துலக தமிழ் மாநாட்டில் கட்டுரை சமர்ப்பிக்க வந்திருந்த பேராளர்களில் அவரும் ஒருவர். 70 வயதைக் கடந்திருந்தாலும் கூட மிகுந்த ஆர்வத்துடன் எல்லா நிகழ்வுகளிலும் பங்கெடுத்துக் கொண்டும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டும் சுறுசுறுப்புடன் அந்தக் கருத்தரங்க நிகழ்வில் அவர் இயங்கிக் கொண்டிருந்தார். என்னை அவருக்கு ஏற்பாட்டாளர்களில் ஒருவர் அறிமுகம் செய்து வைத்தபோது, புன்னகை பூத்த முகத்துடன் இனிய தமிழில் “வணக்கம், நலமாக இருக்கின்றீர்களா..?” என ஐரோப்பிய ஒலிகலந்த தமிழில் அவர் என்னை நோக்கிக் கேட்டது இன்றும் நினைவிலிருந்து அகலவில்லை.
Thursday, 10 August 2017
Shalin Maria Lawrence : ஒடுக்கப்பட்டவர்களை விடவும் ஒடுக்கப்பட்டவர்கள் பெண்கள் .
கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து இந்த நொடி வரை நான் இணைய ஆபாச தாக்குதல்களுக்கும் ,கொலை மிரட்டல்களுக்கு உள்ளாகி வருகிறேன் . ஜல்லிக்கட்டு பிரச்சனை ,ஜாதிவெறி அட்டுழியங்கள் ,ஆபாச மீம்கள் ,வரதட்சணை பிரச்சனை என்று நான் குரல் கொடுத்த ,தொலைக்காட்சிகளில் பேசிய ,இணையத்தில் எழுதிய கருத்துக்களுக்காக ஒரு சாரார் அல்ல ,பல தரப்பினர்களிடம் இருந்து இந்த அசிங்கங்கள் என்னை நோக்கி நடந்துகொண்டே தான் இருக்கிறது .இன்றுவரை .
நான் சிறுபான்மை இனத்தை சார்ந்தவள் ,தலித் பெண் ,லிப்ஸ்டிக் போடுபவள் ,ஸ்லீவ் லெஸ் அணிபவள் ,ஆங்கிலம் பேசுபவள் ,பெரியாரிஸ்ட் ,பெண்ணியவாதி என்கிற அத்தனை விஷயங்களுக்காகவும் என் மேல் பல்முனை தாக்குதல் ,கட்சி பாரபட்சமில்லாமல் ,மத பாரபட்சமில்லாமல் ,ஜாதி பாரபட்சமில்லாமல் ,பாலின பாரபட்சமில்லாமல் நடந்துகொண்டே இருக்கிறது .(இதை சொன்னால் victim card play செய்கிறேன் என்று சில உருப்படாமல் போன ,மூளை இல்லாத ஜென்மங்கள் சொல்லும் ,
ஆனால் "கீழ்ஜாதி தே......யா " என்று என்னை சொன்னவர்கள் என் ஜாதிக்காகதான் சொன்னார்கள் என்று சிறு குழந்தை கூட சொல்லும் என்னை பற்றி வந்த ஆபாச மீம்ஸுகள் இதுவரை முகநூலில் வேறு யாருக்கும் வந்ததில்லை .அவ்வளவு ஆயிரம் .கூகிளில் சென்று ஷாலின் என்று அடித்தால் அடுத்த வார்த்தை "மீம் " என்று வரும் . இது அத்தனையும் நடக்கும்போது எனது நெருங்கிய நண்பர்களே குரல் கொடுக்கவில்லை .< நம்புங்கள் .முதல் சில தடவை இது நடக்கும்போது எனக்கு யாரவது எனக்காக பேசுவார்களா என்று இருந்தது .அதை பற்றி விகடனில் பேட்டியும் கொடுத்தேன் .அதற்குப்பின்பு சிலபேர் எனக்கு ஆதரவாய் பேசினார்கள் . வழக்கு அப்பதிவு செய்ய உதவுவதற்கு அகிலா காமராஜ் ,அனைத்திந்திய மாதர் சங்க தமிழ்நாடு பொது செயலாளர் சுகந்தி ,கவிஞர் கவின்மலர் ,ஜோதிமணி மற்றும் எவிடென்ஸ் அமைப்பு முன்வந்தார்கள் ,ஆனால் சில காரணங்களுக்காக நான் வழக்கு போடவில்லை
நான் சிறுபான்மை இனத்தை சார்ந்தவள் ,தலித் பெண் ,லிப்ஸ்டிக் போடுபவள் ,ஸ்லீவ் லெஸ் அணிபவள் ,ஆங்கிலம் பேசுபவள் ,பெரியாரிஸ்ட் ,பெண்ணியவாதி என்கிற அத்தனை விஷயங்களுக்காகவும் என் மேல் பல்முனை தாக்குதல் ,கட்சி பாரபட்சமில்லாமல் ,மத பாரபட்சமில்லாமல் ,ஜாதி பாரபட்சமில்லாமல் ,பாலின பாரபட்சமில்லாமல் நடந்துகொண்டே இருக்கிறது .(இதை சொன்னால் victim card play செய்கிறேன் என்று சில உருப்படாமல் போன ,மூளை இல்லாத ஜென்மங்கள் சொல்லும் ,
ஆனால் "கீழ்ஜாதி தே......யா " என்று என்னை சொன்னவர்கள் என் ஜாதிக்காகதான் சொன்னார்கள் என்று சிறு குழந்தை கூட சொல்லும் என்னை பற்றி வந்த ஆபாச மீம்ஸுகள் இதுவரை முகநூலில் வேறு யாருக்கும் வந்ததில்லை .அவ்வளவு ஆயிரம் .கூகிளில் சென்று ஷாலின் என்று அடித்தால் அடுத்த வார்த்தை "மீம் " என்று வரும் . இது அத்தனையும் நடக்கும்போது எனது நெருங்கிய நண்பர்களே குரல் கொடுக்கவில்லை .< நம்புங்கள் .முதல் சில தடவை இது நடக்கும்போது எனக்கு யாரவது எனக்காக பேசுவார்களா என்று இருந்தது .அதை பற்றி விகடனில் பேட்டியும் கொடுத்தேன் .அதற்குப்பின்பு சிலபேர் எனக்கு ஆதரவாய் பேசினார்கள் . வழக்கு அப்பதிவு செய்ய உதவுவதற்கு அகிலா காமராஜ் ,அனைத்திந்திய மாதர் சங்க தமிழ்நாடு பொது செயலாளர் சுகந்தி ,கவிஞர் கவின்மலர் ,ஜோதிமணி மற்றும் எவிடென்ஸ் அமைப்பு முன்வந்தார்கள் ,ஆனால் சில காரணங்களுக்காக நான் வழக்கு போடவில்லை
முன்னாள் புலி உறுப்பினர்களே ஆவா குழுவின் பின்னணி? பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர
Samathuvam.Tamil : யாழில் ‘ஆவா’ குழு குறித்த இரகசிய விசாரணையில் வெளியாகின திடுக்கிடும் படங்கள்…
வடக்கை அச்சுறுத்தி வந்த ஆவா எனும் பாதாள உலகக் குழுவின் தற்போதைய தலைவனான நிஷா விக்டர் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் (ரீ.ஐ.டி.) அவர்களை நேற்று மேலதிக விசாரணைகளுக்காக யாழ். பொலிஸாரிடம் கையளித்தனர்.
இதன்போது வாள், மோட்டார் சைக்கிள், கூரிய கத்தி, கைக்குண்டு பயன்படுத்தியமை மற்றும் வெளிநாட்டு தொடர்புகள், 2014 முதல் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புள்ளமை மற்றும் கடந்த ஆண்டும் குறித்த குழுவினர் பொலிஸாரை வெட்டியுள்ளமையும் போன்ற இரகசிய தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.
இந் நிலையில் வடக்கு பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோவின் நேரடி மேற்பார்வையில் குறித்த அறுவரும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 72 மணி நேர தடுப்புய்க் காவலின் கீழ் எடுக்கப்ப்ட்டு விசாரணைக்கு உட்படுத்தப்ப்ட்டுள்ளனர்.<
இதற்கான அனுமதியையும் நேற்றைய தினமே பொலிஸார் யாழ். நீதிவான் சதீஸ்கரனிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதனிடையே தடுப்புக் காவலில் உள்ள ஆறு சந்தேக நபர்களிடமும் , ஆவா குழுவின் பின்னணி, அதற்காக நிதிப் பங்களிப்பை வழங்குவோர் குறித்து விரிவாக விசாரணை செய்யப்படுவதாகவும், அக்குழுவின் நோக்கம் குறித்தும் இதன் போது விச்தேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்தார்.16 மாவட்ட தலைவர்களுக்கு நியமன கடிதம்! - மலையக மக்கள் முன்னணி..
மலையக மக்கள் முன்னணியின் ;16 மாவட்ட தலைவர்களுக்கு நியமன கடிதம்!
- பா.திருஞானம்
மலையகத்தில் காணப்படும் முக்கிய தொழிற்சங்சங்களில் ஒன்றான மலையக மக்கள் முன்னனியின் மலையக தொழிலாளர் முன்னனி பிரதேசங்கள் தோறும் தனது மாவட்ட தலைவர்ளைத் தேர்ந்தெடுத்து தொழிற்சங்கத்தைப் பலப்படுத்தி வருகிறது.
அதன் ஒரு கட்டடாக 16 மாவட்ட தலைவர்கள் தேர்தலின் மூலம் தெரிவு செய்யபட்டு அவர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
முன்னனியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் இந்த நியமனக் கடிதங்களை வழங்கினார்.
இதன்போது முன்னனியின் உயர்மட்ட அதிகாரிகள்¸ அங்கத்தினர். உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள். malaiyaka kuruvi
Mano Ganesan :கொழும்பு அவிசாவளை பென்ரித் தோட்ட மக்களின் வீடமைப்புக்கு மாற்றுக்காணி
Malayaga Kuruvi Lகொழும்பு அவிசாவளை பென்ரித் தோட்ட மக்களின் வீடமைப்புக்கு மாற்றுக்காணி. - அமைச்சர் மனோவின் அமைச்சரவை பத்திரத்துக்கு அங்கீகாரம் . கொழும்பு மாவட்ட அவிசாவளை தொகுதியின் பென்ரித் தோட்டத்தில், குளோரின் வாயுவால் நீர் சுத்திகரிப்பு செய்யப்படும் நிலையத்தையொட்டி அமைந்துள்ள குடியிருப்புகளில் வாழ்கின்ற மக்களுக்கு, அதே தோட்டப்பகுதியில் மாற்றுக்காணி வழங்கி தனி வீடுகளை அமைத்துக்கொள்வதற்கான அனுமதியை கோரி, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், கொழும்பு மாவட எம்பியுமான மனோ கணேசன் சமர்பித்த அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.
இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி - தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் கூறியுள்ளதாவது,
அவிசாவளை பென்ரித் தோட்டத்தின் ஒரு பிரிவில் வாழும் மக்கள், அங்கு அமைந்துள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பாவிக்கப்படும் குளோரின் வாயுவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையத்திலிருந்து ஒருமுறை பெருமளவு குளோரின் வாயுக்கசிவு ஏற்பட்டு பெருந்தொகையான மக்கள் மருத்துமனைக்கு கொண்டு செல்லும் நிலைமை ஏற்பட்டது. அவ்வேளையில் நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தை பெற்ற ஒரு செய்தியாக இச்சம்பவம் இருந்தது.
இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி - தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் கூறியுள்ளதாவது,
அவிசாவளை பென்ரித் தோட்டத்தின் ஒரு பிரிவில் வாழும் மக்கள், அங்கு அமைந்துள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பாவிக்கப்படும் குளோரின் வாயுவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையத்திலிருந்து ஒருமுறை பெருமளவு குளோரின் வாயுக்கசிவு ஏற்பட்டு பெருந்தொகையான மக்கள் மருத்துமனைக்கு கொண்டு செல்லும் நிலைமை ஏற்பட்டது. அவ்வேளையில் நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தை பெற்ற ஒரு செய்தியாக இச்சம்பவம் இருந்தது.
மதுவரி திணைக்கள அதிகாரிகள் சென்ற வாகனம் முற்றுகை! இளைஞர்களை தாக்கியதன் எதிரொலி
- நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்
அட்டன் எபோசிலி பகுதியில் இளைஞர்கள் மூவரை மதுவரி திணைக்கள அதிகாரிகள் தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எபோட்சிலி கமுகவத்தை தோட்டத்திலே 09.08.2017 மாலை 4 மணியவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மதுபாணம் விற்பனை செய்யும் இடத்தை காட்டுமாறு அதிகாரிகள் கேட்ட நிலையில், தனக்கு தெரியது என குறித்த இளைஞன் தெரிவித்த போதே மதுவரி திணைக்கள அதிகாரிகள் தாக்கியதாக தெரியவருகின்றது.
சம்பவத்தினால் பிரதேச பொது மக்கள், அதிகாரிகள் சென்ற வாகனத்தை முற்றுகையிட்டதனால் எபோட்சிலி அட்டன் - மார்க்க போக்குவரத்தும் மூன்று மணி நேரம் வரை பாதிப்படைந்தது.
சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக மதுவரி திணைக்கள அதிகாரிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த பகுதியில் சோதனையில் ஈடுபட்ட நிலையில் மூன்று இளைஞர்களை தாக்கியதாக தெரியருகின்றது.
தாக்குதலுக்கு இலக்காகிய மூன்று இளைஞர்களும் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா கந்தபளையில் கைகுண்டு மீட்பு
நுவரெலியா கந்தபளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தபளை நகர பிரதான குப்பை மேடு அமைந்திருக்கும் கந்தபளை இராகலை பிரதான வீதிக்கு அருகில் இன்று வியாழக்கிழமை மாலை கைகுண்டு ஒன்று கந்தபளை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த இந்த பிரதான வீதியில் சென்ற பாதசாரி ஒருவர் கந்தபளை பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த கந்தபளை பொலிஸார் கைகுண்டை கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து நுவரெலியா பொலிஸ் தலைமையகத்திற்கு தகவல் தெரிவித்த கந்தபளை பொலிஸார் இக்கைகுண்டினை மீட்பதற்கு இராணுவத்தின் குண்டு செயழிலக்கும் பிரிவின் உதவியை நாடியுள்ளனர் என கந்தபளை பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை மாலை 7.45 மணியளவில் கந்தபளை பகுதிக்கு விரைந்த குண்டு செயழிலக்கும் பிரிவு இக்கைகுண்டினை மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இராணுவ பிரிவினரும் கந்தபளை பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது. தினக்குரல்
ரவியின் இராஜினாமா சிறந்த எடுத்துக்காட்டு – பிரதமர்
வெளிவிவகார அமைச்சுப் பதவியிலிருந்து ரவி கருணாநாயக்க விலகியிருப்பது ஒரு எடுத்துக்காட்டாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் இராஜினாமாவை தொடர்ந்து பாராளுமன்றத்தில் ஆற்றிய பிரதமர் உரையின் போதே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்தார்.
கடந்த ஆட்சியில் எவரும் இவ்வாறு இராஜினாமா செய்யவில்லை என்றும், தனக்கு எதிராக சோதனை முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணைகளை இலகுபடுத்துவதற்காக அமைச்சர் ரவி இராஜினாமா செய்திருப்பது நல்லாட்சியை தெளிவுபடுத்தியிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்
இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர் ஊடக சுதந்திரம் தொடர்பிலும் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (அ|நு) dailynews
ஷோபாசக்தி : கத்னா : கேட்டிருப்பாய் காற்றே!
ஸர்மிளா ஸெய்யித்தின் ‘பெண் கத்னா’ குறித்த உரை, மலையக இலக்கியச் சந்திப்பில் விலக்கப்பட்டதைத் தொடர்ந்து பெண் கத்னா குறித்த விவாதம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. கூடவே இலக்கியச் சந்திப்புத் தொடரின் சனநாயகத்தன்மையும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது.
இன்று உலகம் முழுவதும் கத்னாவால் இருபது கோடிப் பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்குறியில் அமைந்திருக்கும் பாலியல் இன்ப நுண்ணுணர்வுக் குவியமான கிளிட்டோரிஸை (Clitoris) முழுமையாகவோ அல்லது பகுதியளவோ சிதைத்துவிடும் இந்தக் கொடுமையான சடங்கு பெண்களது பாலியல் வாழ்வையும் தனிநபர் ஆளுமையையும் சிதைத்துப்போடுவதுடன், அவர்களது வாழ்வு முழுவதும் உளவியல்ரீதியாக அவர்களை அலைக்கழிக்கிறது. வாரிஸ் டைரியின் தன்வரலாற்று நூலான பாலைவனப் பூ இக்கொடுமை குறித்த விரிவான ஆவணம்.
இலங்கையில் இந்தக் கத்னா கொடுமை முஸ்லீம் சமூகத்தில் மிக இரகசியமான முறையில் நடந்துகொண்டிருக்கிறது என்பதைத் தமிழ் எழுத்துப் பரப்பில் முகமட் ஃபர்ஹான், ஸர்மிளா ஸெய்யித் போன்றவர்கள் தங்களது உரையாடல்களிலும் எழுத்துகளிலும் முன்வைத்திருக்கிறார்கள். ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமான இந்தக் கத்னா எதிர்ப்புக் குரல்களிற்கு மாறாக, பெண் கத்னா இஸ்லாம் மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட கடமை என இஸ்லாமிய மத நிறுவனங்களின் குரல்கள் இலங்கையில் வலிமையாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
மஹிந்த எந்த ஒரு அமைச்சரும் எவ்வித தவறும் செய்யவே இல்லை ?
Sinnapalaniandy Sachidanandam : பத்து ஆண்டுகள் இலங்கையின் அதி உயர் பதவியை அலங்கரித்த மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் எந்த ஒரு அமைச்சரும் எவ்வித தவறும் செய்யவே இல்லை என்பதால் ராஜினாமா என்ற சொல் பாவனையில் இல்லாமலே இருந்தது. நல்லாட்சி காலத்தில் ராஜினாமா என்ற சொல் மீண்டும் பாவனைக்கு வந்துள்ளது. தவறு செய்பவர் பதவி விலக வேண்டும் என்ற நியதி அன்று அமுலில் இருந்திருப்பின் இலங்கையின் ஒவ்வொரு குடிமகனும் அமைச்சனாகி இருந்திருக்கலாம். ஒவ்வொரு நிமிடமும் புதிய அமைச்சர் நியமனம் பெற்றிருப்பார். நுழையவும் வெளியேறவும் என இரண்டு வாசல்கள் நிரந்தரமாக திறந்தே இருந்திருக்கும்.
Subashini Thf: கல்வெட்டு பயில்வோம் - தமிழ் மரபு அறக்கட்டளை வழங்கும் பயிற்சி
த.ம.அ வலைப்பக்கத்தில் உள்ள பாடத்தொகுப்பில் பல்லவர் கால கல்வெட்டு எழுத்துக்களைப் பயிலலாம். இன்று வல்லம் கல்வெட்டு பற்றி பார்ப்போம்.
இது முதலாம் மகேந்திரனின் கல்வெட்டு.
வல்லம் கல்வெட்டின் எழுத்துகளை ஊன்றிப்பார்க்கும்போது, சிம்மவர்மனின் செப்பேட்டில் உள்ள எழுத்துகள் சற்றுப் பிற்காலத்தவை என்பது புலப்படும். ஏனெனில், நாம் அடிப்படை எழுத்தாகப் பயின்ற தஞ்சைப்பெரிய கோயில் எழுத்துகளை செப்பேட்டெழுத்துகள் பெரிதும் ஒத்திருப்பதைக் காணலாம். வல்லம் கல்வெட்டு எழுத்துகள் தமிழ் வரிவடிவத்தின் பழைய வடிவம் என்பது அவை தமிழ் பிராமி எழுத்தின் வடிவமைப்பை உள்ளடக்கி இருப்பதால் அறியலாம்.
முழுதாக விளக்கப்படங்களுடன் வாசிக்க .. http://www.heritagewiki.org/index.php…
Wednesday, 9 August 2017
அது அழகானது ,அதில் இருந்து தான் நீ வருகிறாய் .. ஷாலின் !
Shalin Maria Lawrence :
ரசிகன்
..
சிவாஜி ரசிகர்கள் இருந்தார்கள், எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இருந்தார்கள்.
இன்னும் சொல்ல போனால் அவர்களின் பக்தர்களாக இருந்தார்கள். வாய்ப்பு
கிடைக்கும் போதெல்லாம் விவாதத்தில் மோதுவார்கள். வாய் வழி மோதல் தான்.
ஆனால் கருத்தியல் ரீதியாக மட்டும் இருக்கும். ஒருவரை ஒருவர் இழிவுபடுத்த
மாட்டார்கள் .
கமல் ரசிகர்கள் இருந்தார்கள். ரஜினி ரசிகர்கள் இருந்தார்கள். இன்னும் சொல்ல போனால் அவர்களின் வெறியர்களாக இருந்தார்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வாய் மோதலில் துவங்கி அடிதடி வெட்டுக்குத்தில் முடியும் .
விஜய் அஜித் ரசிகர்கள் இருக்கிறார்கள் .
"ஏன் இருக்கிறார்கள்?" என்று கேள்வி கேட்க்கும்படி இருக்கிறார்கள்.
யாராவது ஒருவர் விஜய் பற்றியோ இல்லை அஜித் பற்றியோ ஏதாவது எழுதி விட்டாலோ அல்லது சொல்லி விட்டாலோ, மெசப்பொட்டேமியா காலத்திலிருந்து இந்த காலம் வரையிலுள்ள பெண்களை மட்டும் கொச்சை படுத்தும் வார்த்தைகளை வைத்து அவ்வளவு கீழ்த்தரமான பேச்சுக்கள் செய்கைகள்.
கமல் ரசிகர்கள் இருந்தார்கள். ரஜினி ரசிகர்கள் இருந்தார்கள். இன்னும் சொல்ல போனால் அவர்களின் வெறியர்களாக இருந்தார்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வாய் மோதலில் துவங்கி அடிதடி வெட்டுக்குத்தில் முடியும் .
விஜய் அஜித் ரசிகர்கள் இருக்கிறார்கள் .
"ஏன் இருக்கிறார்கள்?" என்று கேள்வி கேட்க்கும்படி இருக்கிறார்கள்.
யாராவது ஒருவர் விஜய் பற்றியோ இல்லை அஜித் பற்றியோ ஏதாவது எழுதி விட்டாலோ அல்லது சொல்லி விட்டாலோ, மெசப்பொட்டேமியா காலத்திலிருந்து இந்த காலம் வரையிலுள்ள பெண்களை மட்டும் கொச்சை படுத்தும் வார்த்தைகளை வைத்து அவ்வளவு கீழ்த்தரமான பேச்சுக்கள் செய்கைகள்.
கார்பெக்ஸ் வித்தியாலய பாதை விரைவில் செப்பனிடப்படும் என ஸ்ரீதரன் உறுதி
மலையக குருவி : ஆயிரம் பாடசாலையில் உள்வாங்கப்பட்ட கார்பெக்ஸ் வித்தியாலய பாதை செப்பனிட்டுத்தறுமாறு கோரிக்கை! விரைவில் செப்பனிடப்படும் என ஸ்ரீதரன் உறுதி
- நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்
''ஆயிரம் பாடசாலைகள்'' வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலத்திற்கு செல்லும் பிரதான பாதை செப்பனிட்டுத்தறுமாறு பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அட்டன் - நோட்டன் பிரதான வீதியின் காசல்ரீ சந்தியிலிருந்து குடா மஸ்கெலியா சந்திவரை செல்லும் குறுக்குப்பாதையே இவ்வாறு குன்றும் குழியுமாக காணப்படுகின்றது.
Subscribe to:
Posts (Atom)
Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்
கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...
-
தேநீர் இலங்கையின் தேசிய பானம் என்றே கூறலாம். அந்தளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றிய ஒரு பானமாக தேநீர் காணப்படுகிறது. இது இலங்கைக்...
-
பிரான்சிஸ் : ஹெலன்போற்றி தோட்டத்தில் ஓர் கலைக் குடும்பத்தில் பிறந்த பிரான்சிஸ் ஹெலன் அவர்களின் தந்தை சிறந்த நாடக ஆசிரியரும், கலைஞருமாவார...
-
மல்லியப்பு சந்தி திலகர் : தோட்டத் தொழிலாளர்களாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இந்திய வம்சாவளி மலையக மக்கள் தமது சமூக நிலைம...











