மலையக முன்னேற்ற கழகம் malaiyaka munnetra kazhakam
Sunday, 29 October 2017
Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்
Tuesday, 24 October 2017
கெக்கிராவ பட்டினி மாணவி ! இப்போதும் அந்தக்குடும்பத்துக்கு உணவில்லை
Esther Nathaniel : வறுமையும் வாழ்வும்.
கெக்கிராவ மாடாட்டுகம பகுதியில் உள்ள சிங்கள பாடசாலையொன்றில் தரம் பத்தில் கல்வி கற்ற மாணவி திடீரென்று வாந்தி எடுத்துள்ளார் காரணம் தொடர்ந்து மூன்று நாள் உணவு உண்ணவில்லை ஒரு நாள் ஒரு தடவை உணவு உட்கொண்டுள்ளார். அதனால் பசி மயக்கத்தால் வாந்தி எடுத்துள்ளார். பின்னர் அதிபருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவி தொடர்ந்து மூன்று நாள் வாந்தி எடுத்துள்ளார் இதனை அவதானித்த அதிபர் மாணவி கர்ப்பமாக இருப்பதாக எண்ணி வைத்திய பரிசோதனைகள் இன்றி அவரை பாடசாலையை விட்டு உடனடியாக விலக்கயுள்ளார் விடுகை பத்திரத்தையும் வழங்கி.பின்னர் பெற்றோர்கள் அவரை வைத்தியசாலையில் சேர்த்து பரிசோதித்தப்பின்பு அவர் கர்ப்பம் இல்லையென்றும் தொடர்ச்சியான பட்டினியும் உணவு இன்மையும் காரணமாகவே வாந்தி எடுத்துள்ளதாக வைத்திய அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளது.அதிபரின் முட்டாள்த்தனமான பிழையான அவதானத்தால் மாணவிக்கு கெட்டப்பெயர் ஏற்பட்டதாகவும் பாடசாலைக்கும் சமூகத்துக்கும் முகம்கொடுக்க இயலாமல் வெட்கப்பட்டு பிள்ளை தற்கொலைக்கு முயற்சித்துள்ளமையும் மிகவும் வேதனைக்குரியதே இப்போது அவர் தம்புள்ள வைத்தியசாலையில் மேலதிக
சிகிச்சை பெறுகிறார் இப்போதும் அந்தக்குடும்பத்துக்கு உணவில்லை
என்பதும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
சிகிச்சை பெறுகிறார் இப்போதும் அந்தக்குடும்பத்துக்கு உணவில்லை
என்பதும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
Saturday, 7 October 2017
வடக்கு, கிழக்கு இணைந்ததாக இருக்க வேண்டும் :விநாயகமூர்த்தி முரளீதரன்
veerakesari : வடக்கிலும், கிழக்கிலும் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதுவும் தெரியாது" என கருணாம்மான் என்றழைக்கப்படும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்தார்.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி மத்தியகுழு கூட்டம் இன்று காலை மட்டக்களப்பு கல்லடியில் உள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றதனைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்
விநாயகமூர்த்தி முரளீதரன் தொடர்ந்து தெரிவிக்கையில்,
"இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்காக எமது கட்சி குரல் கொடுத்துக் கொண்டே இருக்கும், அது போன்று எமது மக்களின் விடுதலைக்காகவும் ஆணித்தரமாக செயற்படும் என்பதுடன், 20 ஆவது திருத்த சட்டம் தற்ப்பொழுது பாராளுமனறத்தில் அமுலாக்கப்பட்டு வெளிவந்துள்ளது. இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களித்துள்ளது ஆனால் எமது கட்சி இதை முற்று முழுதாக எதிர்க்கின்றது.
Friday, 22 September 2017
கமல் அவர்களே கருப்புக்குள் காவியை மறைக்க முயற்சிக்கிறீர்கள் .தோற்கடிக்கப்படுவீர்கள்.
Damodaran :
தமிழர்களை ஏமாற்ற முயன்றால் ஏமாந்து போவீர்கள்.
தற்போது தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினை ....
ஊழல் ஒழிப்பு அல்ல.
மாறாக ..
எங்கள் மொழி உரிமை...கல்வி உரிமை ...நீர் உரிமை ...நில உரிமை தொழில் உரிமை ..தன்மானம் தன்னாட்சி உரிமை ...பண்பாட்டு கலாச்சார உரிமை என பற்பல சிக்கல்கள் எதிர்நோக்கி உள்ளோம்
69 % இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து
காவேரி தண்ணீர் மறுப்பு ..
இந்தி சமஸ்கிருதம் திணிப்பு ...
நீட் தேர்வு சி பி எஸ் சி நவோதய பள்ளிகள் ,ராணுவ பள்ளிகள் கேந்திரிய வித்யாலயாக்கள் ஒருபுறம்
நெடுவாசல் கதிராமங்கலம் கூடங்குளம் ஓ என் ஜி சி எண்ணெய் எரிவாயு நிலக்கரி மண்டலங்கள் ஒரு புறம்...
ஜி எஸ் டி வரி
கீழடி அகழ்வாராய்வு மோசடி
உதய மின் திட்டம் உணவு பாதுகாப்பு திட்டம் என வித விதமான சுரண்டல்கள் ...... என எண்ணற்ற சிக்கல்களில் சிக்கி தவிக்கின்றது தமிழகம்
ஒரு வார்த்தையில் சொல்லப்போனால் ...மோடி பாஜக அரசு தமிழ்நாட்டின் மீது ஆதிக்க போர் தொடுத்துள்ளது
எனவே நீங்கள் உண்மையாகவே தமிழ் நாட்டுக்கு தொண்டு செய்ய நினைத்தால் ....
நீங்கள் போராடவேண்டியது ஊழலை எதிர்த்து அல்ல ...துணிவிருந்தால்...தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்து தமிழர்களை பழிவாங்கிக்கொண்டு இருக்கின்ற மோடி அரசை எதிர்த்து போராடுங்கள்

மோடி அரசை எதிர்க்க துணிவோ விருப்பமோ இல்லை என்றால் பாஜகவில் சேர்ந்து விடுங்கள்
Wednesday, 20 September 2017
புனிதத்தை தீட்டாக்கிய ஆண்கள் ...வெளிநாடுகளில் இருந்து கற்றுக்கொள்ளுவோம் ..ஷாலின் மரியா லாரன்ஸ்
Shalin Maria Lawrence : சுதந்திரத்தின் நிறம் சிவப்பு
நன்றி குமுதம் : Dated : 6-09 -2017
16 வயதிலிருந்தே எனக்கு தாயாகும் ஆசை இருந்தது .மற்றவர்கள் காதலனை
தேடும் அந்த காலத்தில் எனக்கு தாய்மை உணர்வு மேலோங்கி இருந்தது
.இன்று வரை குழந்தை பெற்றுக்கொள்ளவிட்டாலும் குழந்தைகளுக்கான அந்த
அதீத அன்பும் நேசமும் மனம் முழுதும் பரவி கிடக்கிறது . ஆனால் சில
நாட்களுக்கு முன் நடந்த அந்த விஷயத்தை கேள்வி பட்டபொழுது என் அடி
வயிற்றில் கூர் வாளை கொண்டு கிழித்ததை போல் ஒரு கோர உணர்வு . ஆம்
பாளையம்கோட்டையை சேர்ந்த சாஃரின் ஹாஜிரா என்கிற 12 வயதே ஆனா
ஒரு பெண் குழந்தையின் தற்கொலை செய்திதான் அது .மன்னிக்கவும்
....தற்கொலையல்ல கொலை செய்தி அது . பெண் உடலில் நிகழும்
இயற்கையின் அழகிய மாற்றங்களை தீட்டு ,அசிங்கம் என்று கூறி இழிவு
படுத்தி ஒரு சின்னஞ்சிறு குழந்தையை தற்கொலை என்கிற விஷயத்தை
செய்யவைத்த இந்த சமூகமும் இந்த சமூகத்தின் போலி கோட்பாடுகளும்
செய்த படுகொலை அது .
இரண்டு மாதத்திற்கு முன்பு தான் வயதிற்கு வந்த அந்த சிறுமியின் யூனிபார்ம்
உதிரப்போக்கில் கறைபட்டத்திற்காக அந்த சிறுமியை அவரின் ஆசிரியையை
எல்லார்முன் கடுமையாக திட்டி இருக்கிறார் ,அவருக்கு ஒரு நாப்கினுக்கு கூட ஏற்பாடு செய்யாமல் அவரை தலைமை ஆசிரியரிடம் கொண்டுபோய் நிறுத்தி அவரும் சிறுமியை திட்டி இருக்கிறார் . அந்த விஷயங்கள் தாங்காமல் அந்த குழந்தை சரியாக எழுதக்கூட தெரியாமல் ஒரு கடிதத்தை எழுதி
வைத்துவிட்டு பக்கத்துவீட்டு மாடியில் இருந்து குதித்து தன் உயிரை
மாய்த்திருக்கிறது .
சாரு நிவேதா : வேதம் முழுக்கவும் நிரம்பியிருப்பது எதிரிகள் மீதான துவேஷம் , காமவெறி . சோமபான போதை .
பெரியாரின் கோபமும் ஆவேசமும் எனக்குப் புரிந்தது"-எழுத்தாளர் சாரு நிவேதிதா..
பெரியார்மீது எனக்குக் கொஞ்சம் மனஸ்தாபம் இருந்தது. மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காக தன் வாழ்நாள் முழுவதும் அவர் நடத்திய போராட்டத்தில் கலாச்சாரம் சம்பந்தப்பட்ட பல செழுமையான பகுதிகளும் அடித்துக் கொண்டு போய் விட்டனவே என்பதுதான் என் மனஸ்தாபத்திற்குக் காரணம். உதாரணமாக, பிராமணீயத்தை எதிர்ப்பதற்காக சமஸ்கிருத மொழியை எதிர்த்தார். அதனால் காளிதாசன் எழுதிய அதி அற்புத காவியங்களை நாம் படிக்க முடியாமல் போயிற்று. வருணபேதத்தை முன்னிறுத்துகின்றன என்பதால் புராணங்களையும் இதிகாசங்களையும் எதிர்த்தார். அதனால் உலக இலக்கியங்களிலேயே தலைசிறந்த காவியம் என்று உலக எழுத்தாளர்களால் போற்றப்படும் மகாபாரதத்தைப் படிக்காமல் விட்டோம். இப்படியெல்லாம் இவ்வளவு காலம் நினைத்துக் கொண்டிருந்தேன். அதனால் சமஸ்கிருதத்தில் உள்ள முக்கிய நூல்களை நானே படிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் பெரியாரின் கோபமும் ஆவேசமும் எனக்குப் புரிந்தது.
சாதாரண தரத்தில் தோற்றவர்களும் இனி உயர்தரம் படிக்கலாம்!
Kumaran : க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியெய்தத் தவறிய மாணவர்கள், உயர்தரக் கல்வியைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும் வகையில் மாற்றம் ஒன்றைக் கொண்டுவர கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், எதிர்வரும் காலங்களில் மனித வளத்தை அபிவிருத்தி செய்து, அதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.
மேலும், மாணவர்களின் கல்வியுரிமையை அவர்களுக்கு வழங்கி, அவர்களது ஆளுமைத் திறனை மேம்படுத்தி அவர்களை வேலை செய்யும் வர்க்கத்தினுள் கொண்டுவருவது இன்றியமையாதது என்றும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் முன்னோடித் திட்டத்தை அடுத்த மாதம் 42 பாடசாலைகளில் அறிமுகப்படுத்தவும் கல்வியமைச்சு திட்டமிட்டுள்ளது. வீரகேசரி
மாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்
Kumaran
மாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பாராளுமன்றில் சற்று முன் நிறைவேற்றப்பட்டது.
குறித்த சட்டமூலத்தின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 44 வாக்குகளும் பதிவாகின.
மாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின்போதே இது நிறைவேற்றப்பட்டது. வீரகேசரி
Tuesday, 19 September 2017
மெக்சிகோவில் அதிசக்தி வாய்ந்த பூமியதிர்ச்சி 7.1 ரிச்டர் அளவில்
மெக்சிகோவில் நேற்று ஏற்பட்ட அதிசக்தி வாய்ந்த பூமியதிர்ச்சி காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடி ஒளிந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மெக்சிகோவின் தலைநகரில் இருந்து சுமார் 40 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பூஎப்லா பகுதிக்கு அருகாமையில் நேற்று குறித்த சக்தி வாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மெக்சிகோவில் நேற்று ஏற்பட்ட பூமியதிர்ச்சி 7.1 ரிச்டராக பதிவாகியுள்ளதாக, அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்திய இலங்கை நிதியில் மலையக பாடசால அபிவிருத்தி 895 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி!
மலைய குருவி :இந்தியாவின் 395 மில்லியின் நிதி உதவியுடன் மலையகத்தில் 31 பாடசாலைகளும் கல்வி அமைச்சின் 500 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 60 பாடசாலைகளும் மொத்தமாக 895 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி!
- பா.திருஞானம்
மலையகத்தில் இந்தியாவின் 395 மில்லியின் நிதி உதவியுடன்; 31 பாடசாலைகளும் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கபட்ட 25 கணித விஞ்ஞான பாடசாலைகளும் 2017 ஆம் ஆண்டு கல்வி அமைச்சின் 250 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 35 பாடசாலைகளும் மொத்தமாக 895 மில்லியன் ரூபா செலவில் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். 2018 ஆம் ஆண்டு மலையக பாடசாலைகளின் அபிவிருத்திக்கு மேலும் 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கபடவுள்ளது.
Saturday, 16 September 2017
மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாடு
மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாடு...பெருந்திரளாக கூடிய
இளைஞர்கள்! நோர்ட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன் மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாடு இன்று (16.09.2017) கொட்டகலை சித்தி விநாயகர் ஆலய கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. காலை 11.00 மணியளவில் கொட்டகலை ரொசிட்டா சந்தியில் இருந்து மலையக கலை கலாச்சார நிகழ்வுகளுடன் ஊர்வலம் ஆரம்பமாகி பிரதான மண்டபத்தை வந்தடைந்ததும் நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதல் நிகழ்வாக மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவரும் அமைச்சருமான அமரர் சந்திரசேகரன் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியது. மலையக குருவி

Friday, 15 September 2017
தனுஷ்கோடி மக்கள் வாழ தகுதியான நகரமா?
1964ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழகத்தின் முக்கிய வணிகப்பகுதியாகவும்,
துறைமுக பகுதியாகவும் இருந்த தனுஷ்கோடி பயங்கர புயல் காரணமாக மொத்தமாக சிதைந்தது. தற்போது எஞ்சியிருப்பது பழைய ரயில் நிலையம், சிதைந்துப் போன தேவாலயம், பள்ளிக்கூடம், வீடுகள் என இடிந்த கட்டிட கூடுகள் மட்டுமே இந்த பகுதி அரசாலும், பொதுமக்களாலும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கைவிடப்பட்ட நிலையில் கடந்த ஜூலை 27 முதல் மிச்சமிருக்கும் நிலப்பரப்பும் தார் சாலை மூலம் இணைக்கப்பட்டது. சிறப்புப் பேருந்துகள் வசதியுடன் பழைய தனுஷ்கோடி நகரும் அரிச்சல் முனையும் சுற்றுலாத் தலமாக தற்போது உருப்பெற்றிருக்கிறது. இருப்பினும் இந்த பகுதி மனிதர்கள் வாழ தகுதியுடையதா என்று ஆராய பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்த நிலையில் தனுஷ்கோடி நகரம் மக்கள் வாழத் தகுதியானதா இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற நீதிபதிகள் இரண்டு பேர் வருகிற செப்டம்பர் 17-ம் திகதி தனுஷ்கோடிக்குச் செல்ல உள்ளனர். அவர்கள் கொடுக்கும் அறிக்கையை பொறுத்தே தீர்ப்பு வழங்கப்படும் என தெரிகி தினகரன்

அமைச்சர் திகாம்பரத்திற்கு எதிரான வழக்கு; தொழிலாளர்கள் வெற்றி
Malayaga Kuruviமலையக குருவி : யாபார்க் போராட்டத்தில் பங்கேற்றதாலேயே
வீடுகள் வழங்கப்படவில்லை" - தொழிலாளர்கள் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சினால் வீடுகள் வழங்க மறுக்கப்பட்ட மஸ்கெலிய பிரவுன்ஸ்விக் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. வீடுகள் கிடைத்தமையானது தொழிலாளர்களுக்கு சட்ட ரீதியாக கிடைத்த வெற்றியென பயனாளர்கள் தெரிவிக்கின்றனர். மஸ்கெலிய பிரவுன்ஸ்விக் தோட்டத்தைச் சேர்ந்த லயன் வீடுகளின் 16 காம்பிராக்கள், 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி மின்சார கோளாறினால் தீக்கிரையாக்கப்பட்டது. 16 லயன் வீடுகளில் வாழ்ந்த, 21 குடும்பங்கள் அப்பகுதி பாடசாலையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர். மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி அமைச்சு இத்தொழிலாளர்களுக்கு 23 வீடுகளை அமைத்ததோடு, 2017 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் திகதி அமைச்சினால் வீடுகள் தொழிலாளர்களுக்கு கையளிக்கப்பட்டன. செங்கடி சங்கத்தின் தோட்டத் தலைவர் உள்ளிட்ட இரு தொழிலாளர்களுக்கு வீடுகளை வழங்க அமைச்சு மறுப்புத் தெரிவித்திருந்தது. இது தொடர்பில் அமைச்சிடம் தொழிலாளர்கள் வினவியபோது “எயாபார்க் போராட்டத்தில் பங்கேற்றதாலேயே வீடுகள் வழங்கப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

04.04.1922- தென்னிந்தியாவில் இருந்து மலையகத்துக்கு கூலியாக அழைத்து வரும்போது கொடுத்த வாக்குறுகள்
Wednesday, 13 September 2017
ஏழு எதிரிகளின் குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு அப்பால் நிரூபணம்
தினகரன்: புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் 1ஆம் எதிரி மற்றும் 7 ஆம் எதிரிகள் சார்பாக சாட்சியங்கள் எதுவுமில்லை. 2, 3, 4,5,6,8,9 ஆம் எதிரிகளின் குற்றச்சாட்டுக்கள், சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக, ரயல் அட் பார் நீதிபதிகள் முன்னிலையில் பிரதி சொலிசிட்டர் குமார் ரட்ணம் தெரிவித்தார்.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கூட்டுவன்புணர்வு படுகொலை வழக்கின் விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பா.சசிமகேந்திரன் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய ரயல் அட் பார் முன்னிலையில் கடந்த 3 மாதங்களாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.விசாரணையின் இறுதியாக சட்டத்தரணிகளின் தொகுப்புரைக்காக ரயல் அட்பார் நேற்று (12) கூடியது.
முதலில் வழக்குத் தொடுநர் சார்பாக பிரதி சொலிசிட்டர் குமார் ரட்ணம் தனது சமர்பணத்தினை ஆரம்பித்தார்.
மலையக பெருந்தோட்டங்களின் 30 வருட அநீதி இல்லாதொழிக்கப்பட்டது!
பெருந்தோட்ட பிரதேசங்களின் அபிவிருத்திகளுக்கு, பிரதேச சபைகள்
நிதியுதவி வழங்க முடியாதென்ற 1987ஆம் ஆண்டின் பிரதேச சபை சட்டத்தில், திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நிதியுதவி வழங்க முடியாதென்ற 1987ஆம் ஆண்டின் பிரதேச சபை சட்டத்தில், திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் வலியுறுத்தலின்படி உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இதற்கான ஆலோசனையை நேற்று அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.
இதன் மூலம் 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 33ஆம் பிரிவு திருத்தப்படுவதுடன், வர்த்தமானியில் இது அறிவிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.
இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் கூறியதாவது,
நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, கொழும்பு, காலி, மாத்தறை, குருநாகல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பெருந்தோட்ட புறங்களில் வாழும் மலையக தமிழ் மக்கள் பிரதேச சபை தேர்தல்களில் வாக்களித்து உறுப்பினர்களை தெரிவு செய்யலாம். எனினும் பெருந்தோட்டங்களின் அபிவிருத்திகளுக்கு பிரதேச சபைகள் நிதியொதுக்க முடியாதவாறு 1987 ஆம் ஆண்டின் சட்டம் தடுத்தி ருந்தது.
Mano Ganesan: நான் கையில் தூக்கி வைத்திருக்கும் மட்டக்களப்பு குழந்தைக்கும் என்னை பிடிக்குதே!
Mano Ganesan :கிழக்கு
மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் இன
உறவுகள் சீரற்றுள்ளன. குறிப்பாக தமிழ் மக்கள் தம்மை அரசியல் அனாதைகளாக உணர்கின்றனர். இது நல்லதல்ல. இதை பாராளுமன்ற, மாகாணசபை பொறுப்புகளிலுள்ள அனைவரும் கவனத்தில் எடுக்க வேண்டும்” என சமீபத்தில் மட்டக்களப்புக்கு வந்தபோது நான் சொன்னேன்.
இப்போது, கிருஷ்ணபிள்ளை என்ற ஒரு கிழக்கு மாகாணசபை உறுப்பினர், “மனோ கணேசன், தமிழ் எழுத்து பிழைகளை கவனித்துக்கொண்டு கொழும்பிலேயே இருக்க வேண்டும். மட்டக்களப்பு பக்கம் வரக்கூடாது” என்ற அர்த்தத்தில் சொன்னதை ஒரு ஊடகத்தில் கேட்டேன்.

இந்த “சிரிப்பு பிள்ளை” கொஞ்ச நாள் எம்பியாகவும் இருந்தபோது, அவரை நான்
தனிப்பட்ட முறையில் அறிவேன். ஆகவேதான் இக்குறிப்பை எழுதுகிறேன். (1) நான்
ஒரு கபினட் அமைச்சர். நாடு முழுக்க பொறுப்பும், அதிகாரமும் எனக்குண்டு. (2)
இவர் ஒருமுறை தன் சொந்த ஊரோ எதுவோ, காணிக்கு போக முடியாமல், (2007ம்
ஆண்டு) கோட்டாபயவின் ராணுவத்துக்கு அஞ்சி தவித்திருந்த போது, நான்தான்
கொழும்பில் இருந்து அங்கு போய் அவரை அழைத்து சென்றேன்.
Tuesday, 12 September 2017
ஒலிரூட் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
-Tamil Mirror : எஸ்.கணேசன், ஆ.ரமேஷ், எஸ்.சுஜிதா<
தலவாக்கலை ஒலிரூட் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக 150 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று(12) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தோட்ட நிர்வாகம் 18 கிலோவுக்கு அதிகமான தேயிலை கொழுந்தினை பறிக்குமாறும் வழியுறுத்துவதனால் ஏற்பட்ட முறுகள் நிலை காரணமாக இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தேயிலை மலைகள் காடுகளாக காணப்படுகின்றமையால் கொழுந்து பறிப்பதில் தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தேயிலைக்காணிகள் பல நல்ல தேயிலை விளைச்சலை தரக்கூடியவையாக உள்ளப்போதிலும், தோட்ட நிர்வாகம் இந்த தேயிலை மலைகளை சுத்தம் செய்து கொடுபதில் அக்கரை காட்டுவதில்லை என தொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Monday, 11 September 2017
இங்கிருந்து ..மலையக மக்களின் வாழ்வியலை மையமாக கொண்டு வெளிவருகிறது
Malayaga Kuruvi
மலையக மக்களின் யதார்த்தங்களை நேர்மையுடன் எடுத்துக்காட்டும் திரைப்படம் என்ற கருவுடன் சுமதியின் ''இங்கிருந்து''
மலையக மக்களின் வாழ்வியலை மையப்படுத்தும் கதையாக இருக்கின்றது.
மலையக மக்களின் வாழ்வியலை நேர்மையாக காட்டுகிறதா என்பதை நீங்களும் பார்க்கலாம்!
டிசம்பர் 20ஆம் திகதி முதல் ஹட்டன் - விஜித, கொழும்பு - சினிசிற்றி திரையரங்குகளில்...
- Shaan Sathees
இலங்கை மலையகத்தமிழ் இலக்கியமும் கலைபண்பாட்டு வடிவங்களும் " - பன்னாட்டு் கருத்தரங்க நிகழ்வு
Thavamudhalvan Davan :
காந்திகிராம பல்கலைக்கழகம்
ஆஸ்திரேலியா தமிழ்
சங்கம் மலையக எழுத்தாளர் மன்றம் ஆகியவை இணைந்து மிகவும் பொருத்தமான வேளையில் நடத்திய "இலங்கை மலையகத்தமிழ் இலக்கியமும் கலைபண்பாட்டு வடிவங்களும் " - பன்னாட்டு் கருத்தரங்க நிகழ்வு மிகவும் மகிழ்வான நிகழ்வுகளிலொன்று! ஆயிரத்து எண்ணூற்று பதினைந்து ஆண்டுகளில் தொடங்கிய மலையகத்தமிழர் புலம்பெயர்வின் இருநூறு ஆண்டுகளைக் கடக்கும் நடப்பாண்டுகளில் இந்த நிகழ்வு வளமானதாகவும், உழைக்கும் மக்களுக்கு நெருக்கமானதாகவும், பாசாங்குகளற்ற மக்கள் இலக்கியமாக திகழும் மலையக இலக்கியத்தின் செழுமைகளைப் பேசவும் , இனியும் முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்தும் பரிசீலிக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த நிகழ்வை ஒழுங்கு செய்த அனைவருக்கும் நாம் நன்றிசொல்ல கடமை பட்டுள்ளோம் முடிந்தவரை நிகழ்வுகளை எல்லோருக்கும் பயனுள்ளதாக்க படங்களாக, ஒளிப்படங்களாக, ஒலிக்குரலாக பதிவு செய்திருக்கிறேன்.ஒவ்வொன்றாக பதிவிடுகிறேன். மகிழ்ச்சி அன்பின் உறவுகளே!

மனோ கணேசன்: தமிழ் முற்போக்கு கூட்டணியின் இன்னொரு வெற்றி>
தமிழ் முற்போக்கு கூட்டணியின் இன்னொரு வெற்றி>
பெருந்தோட்ட பிரதேசங்களில் வாழும் மக்கள், பிரதேச சபைகளுக்கு வாக்களிக்க முடியும்; ஆனால், பிரதேச சபைகளால், தோட்ட பிரதேசங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணியாற்ற முடியாது என்ற 30 வருட பழமை சட்டம், திருத்தப்படுகிறது.
நமது வலியுறுத்தலின்படி மாகாணசபைகள், உள்ளூராட்சி அமைச்சர் நண்பர் பைசர் முஸ்தபா இதற்கான பத்திரத்தை நாளை (12/09/17) அமைச்சரவையில் சமர்பிக்கின்றார். 1987ம் வருடத்தின் 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 33ம் பிரிவு இதன் மூலம் திருத்தப்படுகிறது. இதையடுத்து இது வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.
கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பி. முத்துலிங்கம் குழுவினரால் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு, இன்று கூட்டணியினால் அரசியல்ரீதியாக ஆளுமையுடன் முன்னேடுக்கப்பட்டுள்ள இவ்விவகாரம் எமது காத்திரமான முன்னெடுப்புகளில் ஒன்றாகும்.
Subscribe to:
Posts (Atom)
Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்
கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...
-
ஒரு விதேச பெண்ணாக இலங்கை வந்து இலங்கைப் பெண்களுக்காக (குறிப்பாக மலையகப் பெண்களுக்காக) வாழ்ந்து மடிந்த ஒரே ஒரு தமிழ்ப் பெண்ணைத் தான் நா...
-
தேநீர் இலங்கையின் தேசிய பானம் என்றே கூறலாம். அந்தளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றிய ஒரு பானமாக தேநீர் காணப்படுகிறது. இது இலங்கைக்...
-
Malayaga Kuruvi !!!!...பகிரங்க வேண்டுகோள் 47 வது இலக்கிய சந்திப்பு மலையகம்..!!!! சமூக ஆர்வலர் Ratnasingham Annesley அவர்களின் வேண்டுகோளை...