Tuesday, 19 September 2017

இந்திய இலங்கை நிதியில் மலையக பாடசால அபிவிருத்தி 895 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி!

மலைய குருவி :இந்தியாவின் 395 மில்லியின் நிதி உதவியுடன் மலையகத்தில் 31 பாடசாலைகளும் கல்வி அமைச்சின் 500 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 60 பாடசாலைகளும் மொத்தமாக 895 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி!
- பா.திருஞானம்
மலையகத்தில் இந்தியாவின் 395 மில்லியின் நிதி உதவியுடன்; 31 பாடசாலைகளும் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கபட்ட 25 கணித விஞ்ஞான பாடசாலைகளும் 2017 ஆம் ஆண்டு கல்வி அமைச்சின் 250 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 35 பாடசாலைகளும் மொத்தமாக 895 மில்லியன் ரூபா செலவில் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். 2018 ஆம் ஆண்டு மலையக பாடசாலைகளின் அபிவிருத்திக்கு மேலும் 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கபடவுள்ளது.

கல்வி அமைச்சின் பெருந்தோட்ட பாடசாலைகள் அபிவிருத்தி பிரிவின் ழூலம் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தில் 2016. 2017 ஆம் ஆண்டுக்கான வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கபட்டு வருகின்றன. இந்தியாவின் 300 மில்லியன் நிதி உதவியுடன் 30 பாடசாலைகள் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளபட்டு வருகின்றன. மேலும் இந்திய உதவியுடன் புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி 95 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யபடவுள்ளது இதற்கான ஒப்பந்தம் இந்திய அரசுடன் ஓரிரு வாரங்களில் கையொப்பம் இடுவதற்கு தீர்மாணிக்கபட்டுள்ளது.
மேற்படி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடல் கல்வி அமைச்சின் பெருந்தோட்ட பாடசாலைகள் பணிப்பாளர் திருமதி சபாரஞ்சன் அவர்களின் ஏற்பாட்டில். மகரகம தேசிய கல்வியற் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் அபிவிருத்திக்குத் தெரிவு செய்யபட்ட மலையக பாடசாலைகளின் அதிபர்கள் அழைக்கபட்டிருந்தனர். இதன் போது ஒவ்வொரு பாடசாலையாக அபிவிருத்தி மீள்ளாய்வு செய்யபட்டு அதற்கான தீர்வுகள் உடனுக்குடன் வழங்கபட்டன.
இந்த மீளாய்வுக் கலந்துரையாடலில் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன்¸ கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் அனுர விஜேரத்தன¸ கல்வி அமைச்சின் கட்டட அபிவிருத்தி பனிப்பாளர் கலாநிதி அபேசுந்தர¸ கல்வி அமைச்சின் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயல்திட்டப் பணிப்பாளர் பத்மநாதன்¸ இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தின் உதவி செயலாளர் மஞ்சுநாத்¸ கல்வி அமைச்சின் தமிழ் கல்வி அபிவிருத்தி பிரிவு பணிப்பாளர் எஸ். முரளிதரன்¸ மத்திய மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர்¸ ஏ.சத்தியேந்திரா¸ மத்திய மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் எஸ்.சதீஸ்¸ உட்பட மத்திய¸ ஊவா¸ சப்ரகமுவ¸ மாகணங்களின் கல்வி அதிகாரிகள்¸ கட்டட பொறியியலாளர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.
இந்த விடயம் தொடர்பில் இங்கு கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் மலையத்திற்கு கல்வி இராஜாங்க அமைச்சு என்ற ஒன்று கிடைத்தமை பெரும் வரப்பிரசாதமாகும். இச் சந்தர்பத்தில் மலையத்தில் காணப்படும் 844 பெருந்தோட்டப் பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்வதற்கு நான் கடமைபட்டுள்ளேன். இதை நான் செய்யாவிட்டால் வரலாற்று குற்றவாளியாக கருதபடுவேன். இதற்கு மலையக பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அதிபர்கள் என்னுடன் கட்டாயம் ஒத்துழைக்க வேண்டும். நீங்களும் ஒத்துழைக்காவிட்டால் நீங்களும் வரலாற்றுக் குற்றவாளிகளாகக் கருதபடுவீர்கள். ஆகவே நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து மலையக பாடசாலைகளை அபிவிருத்தி செய்வோம் என்று கூறினார்

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...