Wednesday, 20 September 2017

சாதாரண தரத்தில் தோற்றவர்களும் இனி உயர்தரம் படிக்கலாம்!

Kumaran : க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியெய்தத் தவறிய மாணவர்கள், உயர்தரக் கல்வியைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும் வகையில் மாற்றம் ஒன்றைக் கொண்டுவர கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், எதிர்வரும் காலங்களில் மனித வளத்தை அபிவிருத்தி செய்து, அதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. மேலும், மாணவர்களின் கல்வியுரிமையை அவர்களுக்கு வழங்கி, அவர்களது ஆளுமைத் திறனை மேம்படுத்தி அவர்களை வேலை செய்யும் வர்க்கத்தினுள் கொண்டுவருவது இன்றியமையாதது என்றும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இதன் முன்னோடித் திட்டத்தை அடுத்த மாதம் 42 பாடசாலைகளில் அறிமுகப்படுத்தவும் கல்வியமைச்சு திட்டமிட்டுள்ளது. வீரகேசரி

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...