உறவுகள் சீரற்றுள்ளன. குறிப்பாக தமிழ் மக்கள் தம்மை அரசியல் அனாதைகளாக உணர்கின்றனர். இது நல்லதல்ல. இதை பாராளுமன்ற, மாகாணசபை பொறுப்புகளிலுள்ள அனைவரும் கவனத்தில் எடுக்க வேண்டும்” என சமீபத்தில் மட்டக்களப்புக்கு வந்தபோது நான் சொன்னேன்.
இப்போது, கிருஷ்ணபிள்ளை என்ற ஒரு கிழக்கு மாகாணசபை உறுப்பினர், “மனோ கணேசன், தமிழ் எழுத்து பிழைகளை கவனித்துக்கொண்டு கொழும்பிலேயே இருக்க வேண்டும். மட்டக்களப்பு பக்கம் வரக்கூடாது” என்ற அர்த்தத்தில் சொன்னதை ஒரு ஊடகத்தில் கேட்டேன்.
இந்த “சிரிப்பு பிள்ளை” கொஞ்ச நாள் எம்பியாகவும் இருந்தபோது, அவரை நான்
தனிப்பட்ட முறையில் அறிவேன். ஆகவேதான் இக்குறிப்பை எழுதுகிறேன். (1) நான்
ஒரு கபினட் அமைச்சர். நாடு முழுக்க பொறுப்பும், அதிகாரமும் எனக்குண்டு. (2)
இவர் ஒருமுறை தன் சொந்த ஊரோ எதுவோ, காணிக்கு போக முடியாமல், (2007ம்
ஆண்டு) கோட்டாபயவின் ராணுவத்துக்கு அஞ்சி தவித்திருந்த போது, நான்தான்
கொழும்பில் இருந்து அங்கு போய் அவரை அழைத்து சென்றேன்.
(3) அப்புறம் இந்த “எங்க ஊருக்கு வாருங்கள், வரவேண்டாம்” என்பதையெல்லாம் மக்கள் அல்லவா சொல்ல வேண்டும்? நான் கையில் தூக்கி வைத்திருக்கும் மட்டக்களப்பு குழந்தைக்கும் என்னை பிடிக்குதே, நான் என்ன செய்ய..?
(3) அப்புறம் இந்த “எங்க ஊருக்கு வாருங்கள், வரவேண்டாம்” என்பதையெல்லாம் மக்கள் அல்லவா சொல்ல வேண்டும்? நான் கையில் தூக்கி வைத்திருக்கும் மட்டக்களப்பு குழந்தைக்கும் என்னை பிடிக்குதே, நான் என்ன செய்ய..?
No comments:
Post a Comment