Monday, 11 September 2017

மனோ கணேசன்: தமிழ் முற்போக்கு கூட்டணியின் இன்னொரு வெற்றி>

தமிழ் முற்போக்கு கூட்டணியின் இன்னொரு வெற்றி> பெருந்தோட்ட பிரதேசங்களில் வாழும் மக்கள், பிரதேச சபைகளுக்கு வாக்களிக்க முடியும்; ஆனால், பிரதேச சபைகளால், தோட்ட பிரதேசங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணியாற்ற முடியாது என்ற 30 வருட பழமை சட்டம், திருத்தப்படுகிறது. நமது வலியுறுத்தலின்படி மாகாணசபைகள், உள்ளூராட்சி அமைச்சர் நண்பர் பைசர் முஸ்தபா இதற்கான பத்திரத்தை நாளை (12/09/17) அமைச்சரவையில் சமர்பிக்கின்றார். 1987ம் வருடத்தின் 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 33ம் பிரிவு இதன் மூலம் திருத்தப்படுகிறது. இதையடுத்து இது வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பி. முத்துலிங்கம் குழுவினரால் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு, இன்று கூட்டணியினால் அரசியல்ரீதியாக ஆளுமையுடன் முன்னேடுக்கப்பட்டுள்ள இவ்விவகாரம் எமது காத்திரமான முன்னெடுப்புகளில் ஒன்றாகும்.

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...