![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDYpLv7Zw-boLQB03-dY0HkuZ3GmclzD_mKoGXCTU71yB-uzpmHlD__JN0xf01CMrwE6jGciYZGABJ43jS-xLlXdsLstuISbi1etExdqPc2epG0JowrELRlspwqXuz4pRhGh8NcUh96kA/s640/21752784_506240453061160_6490905439408100309_o.jpg)
வீடுகள் வழங்கப்படவில்லை" - தொழிலாளர்கள் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சினால் வீடுகள் வழங்க மறுக்கப்பட்ட மஸ்கெலிய பிரவுன்ஸ்விக் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. வீடுகள் கிடைத்தமையானது தொழிலாளர்களுக்கு சட்ட ரீதியாக கிடைத்த வெற்றியென பயனாளர்கள் தெரிவிக்கின்றனர். மஸ்கெலிய பிரவுன்ஸ்விக் தோட்டத்தைச் சேர்ந்த லயன் வீடுகளின் 16 காம்பிராக்கள், 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி மின்சார கோளாறினால் தீக்கிரையாக்கப்பட்டது. 16 லயன் வீடுகளில் வாழ்ந்த, 21 குடும்பங்கள் அப்பகுதி பாடசாலையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர். மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி அமைச்சு இத்தொழிலாளர்களுக்கு 23 வீடுகளை அமைத்ததோடு, 2017 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் திகதி அமைச்சினால் வீடுகள் தொழிலாளர்களுக்கு கையளிக்கப்பட்டன. செங்கடி சங்கத்தின் தோட்டத் தலைவர் உள்ளிட்ட இரு தொழிலாளர்களுக்கு வீடுகளை வழங்க அமைச்சு மறுப்புத் தெரிவித்திருந்தது. இது தொடர்பில் அமைச்சிடம் தொழிலாளர்கள் வினவியபோது “எயாபார்க் போராட்டத்தில் பங்கேற்றதாலேயே வீடுகள் வழங்கப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இதற்கு எதிராக தொழிலாளர்கள் இருவரும் மேன் முறையீட்டு நீதிமன்றில், அமைச்சிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணையின் போது, பிரச்சினையை சமரசமாக முடித்துக்கொள்ள அமைச்சு இணங்கியுள்ளது. வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவிருந்த நிலையில் அமைச்சு கடந்த 8ஆம் திகதி இரண்டு தொழிலாளர்களுக்கும் வீடுகளை வழங்க முன்வந்ததோடு, வீடுகளுக்கான திறப்புகளையும் கையளித்துள்ளது. பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்த நிலையில் வழக்கை மீளப்பெறவுள்ளதாக மனுதாரர்கள் தரப்பு சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
வழக்கின் மூலம் தொழிலாளர்களின் உரிமை சட்டரீதியாக வெற்றிக்கொள்ளப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் செயற்பட்ட செங்கொடிச் சங்கம் தெரிவிக்கின்றது. வீடுகள் கிடைக்கப்பெற்றமை தொடர்பில் பாதிக்கப்பட்ட தொழிலாளர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார். நன்றி - IBC
No comments:
Post a Comment