மெக்சிகோவில் நேற்று ஏற்பட்ட அதிசக்தி வாய்ந்த பூமியதிர்ச்சி காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடி ஒளிந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மெக்சிகோவின் தலைநகரில் இருந்து சுமார் 40 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பூஎப்லா பகுதிக்கு அருகாமையில் நேற்று குறித்த சக்தி வாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மெக்சிகோவில் நேற்று ஏற்பட்ட பூமியதிர்ச்சி 7.1 ரிச்டராக பதிவாகியுள்ளதாக, அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
குறித்த பூமியதிர்ச்சியில் இதுவரையில் 4 பேர் உயிரிழந்துள்ளதோடு, குறித்த பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment