Thursday, 31 August 2017

வன்னியில் மலையக பெண் கிராமசேவகரை மிரட்டும் வடக்கு ஊடக ரவுடி!

Malayaga Kuruvi : வன்னியில் கடமைப்பபுரியும் மலையகத்தை சேர்ந்த பெண் கிராம சேவகரை மிரட்டும் ஊடகவியலாளர்....!!! tnn எனும் இணையத்தளத்தின் வன்னி பிராந்திய செய்தியாளர் என கூறும் வடக்கை சேர்ந்த ஊடகவியலாளர் வன்னியில் கடமையாற்றும் மலையகத்தை சேர்ந்த பெண் கிராம சேவகரை மிரட்டி இருக்கிறார். தமிழ் இளைஞர்களுக்கிடைய ஏற்பட்ட மோதலை தடுத்து சமரசம் செய்யுமாறு மலையகத்தை சேர்ந்த பெண் கிராம சேவகரின் உதவியை பொலிசார் நாடியுள்ளனர். இதையடுத்து துரித நடவடிக்கை எடுத்த கிராம சேவகர் மீது கோபம் கொண்ட சண்டையில் ஈடுப்பட்ட கோஷ்டியின் நண்பனான ஊடகவியலாளர் பொலிசாருக்கு கிராம சேவகர் சார்பாக இருப்பதாக கூறியுள்ளார். அது மாத்திரமன்றி" பொலிசாருக்கும் உனக்கும் தொடர்பு இருப்பதாக செய்தி போடுவேன் , மலையகத்தை சேர்ந்த உனக்கு இங்கு என்ன வேலை " என மிரட்டியுள்ளார். இதனையடுத்து பெண் கிராம சேவகர் தனது உயர் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளார். ஊடக தர்மத்தை மீறும் இவர்கள் ஊடகவியலாளர்களா...?

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...