Friday, 1 September 2017
குழந்தையை 40 முறை கன்னத்தில் அறைந்த ஆசிரியை ரித்திகா ... லக்னோ
லக்னோவில் உள்ள பள்ளி ஒன்றில் வருகை பதிவேடு பரிசோதனையின்போது எழுந்திருந்து உள்ளேன் அம்மா என சொல்லாத குழந்தையை ஆசிரியை 40 முறை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோவில் உள்ள செயின்ட் ஜான் வைத்யன்யா பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் ரித்தீஷ் புதன்கிழமை( ஆகஸ்ட் 31) வீட்டுக்குத் திரும்பியபோது, கன்னம் வீங்கிக் காணப்பட்டிருந்தது. இதையடுத்து, குழந்தையிடம் பெற்றோர் விசாரித்தபோது, ஆசிரியை தன்னை அடித்ததைக் கூறியுள்ளார்.
இதுகுறித்து பள்ளியில் மற்ற குழந்தைகளிடம் விசாரிக்கும்போது, வருகை பதிவேடு பரிசோதனையின்போது, ரித்தீஷ் ஓவியம் வரைந்து கொண்டிருந்தான். ஆசிரியை அவனது பெயரை அழைத்தபோது, எழுந்திருந்து பதிலளிக்காத காரணத்தால், அவனது கன்னத்தில் 40 முறை அடித்தார்.
பின்பு, ரித்தீஷ் மயக்கம்போட்டு தரையில் விழுந்தபோது, ஆசிரியை வகுப்பறை விட்டுச் சென்றுவிட்டார் என தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் பள்ளி முதல்வரிடம் புகார் அளித்தனர். பள்ளி நிர்வாகம் சிசிடிவி காட்சிகளைப் பரிசோதனை செய்தபோது, ஆசிரியை ரிதிகா வி ஜான் குழந்தையை அடித்தது உறுதி செய்யப்பட்டது. ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. குழந்தையின் பெற்றோர் புகாரின்பெயரில் ஆசிரியை மீது போலீஸ் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது. மின்னம்பலம்
Subscribe to:
Post Comments (Atom)
Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்
கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...
-
ஒரு விதேச பெண்ணாக இலங்கை வந்து இலங்கைப் பெண்களுக்காக (குறிப்பாக மலையகப் பெண்களுக்காக) வாழ்ந்து மடிந்த ஒரே ஒரு தமிழ்ப் பெண்ணைத் தான் நா...
-
தேநீர் இலங்கையின் தேசிய பானம் என்றே கூறலாம். அந்தளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றிய ஒரு பானமாக தேநீர் காணப்படுகிறது. இது இலங்கைக்...
-
Malayaga Kuruvi !!!!...பகிரங்க வேண்டுகோள் 47 வது இலக்கிய சந்திப்பு மலையகம்..!!!! சமூக ஆர்வலர் Ratnasingham Annesley அவர்களின் வேண்டுகோளை...
No comments:
Post a Comment