மலையகத்தில் தற்போது வழங்கப்படும் காணி அனுமதி பத்திரத்தின் சட்டநிலை என்ன? மலையக மக்களுக்கு வழங்கப்படும் காணி உறுதிகள் குறித்து பழ. நாகேந்திரன் அவர்களின் கேள்விகளும், சந்தேகங்களும்! (முகநூலில் இருந்து) இலங்கை பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்களும், அதன் வழிமுறைகளுமே சட்டப்படி செல்லுபடியாகும். மலையக பெருந்தோட்டங்களை பொருத்தவரை அவை பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் வருகின்றன. பெருந்தோட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரச காணிகள் நீண்ட கால குத்தகைக்கே வழங்கப்பட்டுள்ளன. சில தோட்டங்கள் தனியார் காணிகள் ஆகும். தற்போதைய சூழலில் மலையக மக்களுக்கு வழங்கப்படும் காணியுடன் கூடிய வீடு என்பது இந்த பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் செயற்படும் தோட்டங்களின் காணியில் தான் என்றும் அந்த காணிகளுக்கு பெருந்தோட்ட நிர்வாகத்தினரே காணி அனுமதி பத்திரம் வழங்குகின்றனர் என்றும் தெரியவருகிறது.
நாட்டின் ஏனைய பகுதியில் காணி கட்டளை சட்டப்படி அனுமதி பத்திரம் வழங்கப்பட்டு பின்னர் அவை அளிப்பு செய்யப்பட்டு அதன்பின்னர் அவை தனியார் காணி என்ற நிலையை சட்டப்படி அடைகின்றன. ஆனால் மலையகத்தில் தற்போது வழங்கப்படும் காணி அனுமதி பத்திரத்தின் சட்டநிலை என்ன? இக்காணிகளுக்கு நாட்டில் ஏனைய பகுதியில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைப்படி அளிப்பு வழங்கப்படுமா? இந்த நடைமுறைகளுக்கு பாராளுமன்ற அங்கிகாரம் உள்ளதா? என்பதை மலையக மக்களின் விடியலுக்காக குரல்கொடுப்பவர்கள் சிந்தித்து பார்க்கவேண்டும். பகிர்வு : Amheshwaren Arlg
No comments:
Post a Comment