உழைப்பால் உயர்ந்தவர்கள் மலையகத் தமிழர்!
மலையக இளைஞர்களை இழிவுபடுத்திய சக்தி தொலைக்காட்சி செய்தி குறித்து
மலைய இளைஞனின் பகிரங்க மடல்!
மலைய இளைஞனின் பகிரங்க மடல்!
சக்தி தொலைக்காட்சியில இன்று 23.08.2017 இரவு ஒளிபரப்பான பிரதான செய்திகளில் மலையக இளைஞர்கள் குறித்து சித்தரிக்கப்பட்ட செய்தியொன்று குறித்து மலையக இளைஞனின் பகிரங்க மடலாக இதனைப் பதிவிடுகிறோம்.
எமது சமூகத்தை யார் வேண்டுமானாலும் கீழ்த்தரமாகவும், ஏலனமாகவும் பேசலாம் என்ற நிலை வந்துவிட்டது. அரசியலுக்காக தேவையற்றவிதத்தில் விமர்சிப்பதை நாம் வன்மையாக கண்டிப்போம்.
சக்தி தொலைக்காட்சி 23.08.2017 வெளியிட்ட செய்தி, எமது சமூகத்தை கேவலமாக சித்தரிக்க முயற்சிக்கிறது.
மலையக இளைஞர்கள் தலைநகரில் தரம் தாழ்ந்த தொழிலில்களில் ஈடுபடுவதைப் போல் சித்தரிக்க அந்த தொலைக்காட்சி முயற்சிக்கிறது. ஏன் இப்படி எமது இனத்தை மட்டும் அவமானப்படுத்துகிறது?
கூலியாக இருந்த எத்தனையோ பேர் இன்று கொழும்பு தலைநகரில் பெரும் வர்த்தகர்களாக இருக்கிறார்கள். எமது சமுகத்தில் இருந்து, கற்று, உயர்ந்து, உலகின் பல நாடுகளிலும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். இலங்கையிலும் பல முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள்.
பல தடைகளுக்கு மத்தியிலும் மலையக சமூகத்தில் பலர் இன்றும் சாதனைகளை செய்துள்ளனர். இன்னமும் செய்து வருகின்றனர்.
''தொழில் இருந்தால் அந்த தொழிலை செய்ய ஒருவர் தேவையாக இருக்கிறான். இதுவே சமூகமாக பார்க்கப்படுகிறது''
இதை எவனோ ஒருவர் நேர்மையாக செய்து உழைத்து தனது வாழ்க்கையைக் கௌவரமாக கொண்டு நடத்துகிறார்.
அதனை ஏன் ஏலனமாகவும், கீழ்த்தரமாகவும் சித்தரிக்க முயற்சிக்க வேண்டும்.
இதை எவனோ ஒருவர் நேர்மையாக செய்து உழைத்து தனது வாழ்க்கையைக் கௌவரமாக கொண்டு நடத்துகிறார்.
அதனை ஏன் ஏலனமாகவும், கீழ்த்தரமாகவும் சித்தரிக்க முயற்சிக்க வேண்டும்.
மூட்டைத் தூக்குவதிலும், ரொட்டி போடுவதிலும் என்ன குறைகண்டது சக்தி தொலைக்காட்சி?
கொழும்பு கதிரேன் வீதியிலுள்ள சாப்பாட்டுக் கடைகளில் வடக்கு இளைஞர்கள் தான் கூலித்தொழில் செய்கின்றனர்.
ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்ற வடக்கு தமிழர்களில் அநேகர் ''கழுவும்'' தொழிலை செய்தவர்கள் தான்.
இதுவொன்றும் தரக்குறைவான செயல் அல்ல. செய்யும் தொழிலை வைத்து ஏன் அவனையும், அவனது சமூகத்தையும் தரம் தாழ்த்திக் காட்டவேண்டும்.
இதுவொன்றும் தரக்குறைவான செயல் அல்ல. செய்யும் தொழிலை வைத்து ஏன் அவனையும், அவனது சமூகத்தையும் தரம் தாழ்த்திக் காட்டவேண்டும்.
ஒருவன் செய்யும் தொழிலை வைத்து அவனையும் அவன் சமூகத்தையும் மதிப்பிடக்கூடாது.
மலையக அரசியல்வாதிகள் சிலருடன் இருக்கும் அரசியல் பகைக்காக, ஒட்டுமொத்த சமூகத்தையும் அவமானப்படுத்தியும், கேவலப்படுத்தியும் காட்டுவது தானா ஊடக தர்மம்?
உங்கள் அரசியலுக்காக எங்களின் சமூகத்தை இழிபடுத்தும் உங்கள் ஊடக வியாபார, விபச்சாரத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.
இவ்வாறு எமது மலையக சமூகத்தை தொடர்ந்து தரம் தாழ்த்திக் காட்டுவதற்கும், கீழ்த்தரமாக சித்தரிப்பதற்கும் எதிராக மலையக மக்கள் சாத்வீக ரீதியாக போராடி உங்களின் தொலைக்காட்சி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை பகிரங்கமாக எச்சரிக்கிறோம்.
இவ்வாறு ஒரு சமூகத்தை குறிவைத்து, திட்டமிட்டு இழிவுபடுத்திக் காண்பிப்பதுகூட இனவாத செயல்பாடுதான் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.
உழைப்பால் உயர்ந்தவர்கள் மலையகத் தமிழர்!
இன்றைய கூலி! நாளைய முதலாளி!!
இன்றைய கூலி! நாளைய முதலாளி!!
இப்படிக்கு
கொழும்பில் வேலைசெய்யும் மலையக இளைஞன்
மாரிமுத்து கிருஷ்ணா
கொழும்பில் வேலைசெய்யும் மலையக இளைஞன்
மாரிமுத்து கிருஷ்ணா
பின்குறிப்பு : உங்களின் கருத்துக்களை நாகரீகமாக பாருங்கள். எமது சமூகத்தை உலகம் உற்றுநோக்கி வருகிறது. மலையககுருவி
No comments:
Post a Comment