அம்மாவே ''சாத்தான் '' என திட்டிய சிவத்தின் தாய்!
ஜெர்மனி நாட்டு ஜனநாயக சட்டத்தில் கருத்து சுதந்திரம் பெரிதும் மதிக்கப்படும். அங்கு ஐஸ் போன்ற தீவிரவாத இயக்கங்கள் பற்றி கூட பொது இடங்களில் பேசக்கூடிய அனுமதியுண்டு. பேசுபவர்களும் உண்டு. இந்த சட்டம் சிவத்திற்கு நன்று பரிச்சயம். எனவே, தான் முகநூலில் இனவாதம் பேசியதற்கு தன்னை கைதுசெய்ய முடியாது என்று அவர் நன்கு அறிந்துவைத்திருந்தார். இலங்கையில் தனக்கெதிராக முன்னெடுத்த முயற்சிகளையும் முறைப்பாடுகளையும் பார்த்து அவர் சிரித்தார். இதை அறிந்த நாம், இவரை மடக்க மூன்று முனைகளில் முனைந்தோம்.
1) இவரின் வேலை இடத்தில் முறையிடுவது. (ஜேர்மன் கம்பனிகள் தங்கள் பெயரில் ஒரு இனவாதி இருப்பதை விரும்ப மாட்டார்கள். அப்படி பேசுபவர்களை வேலையில் இருந்து விலக்கும் அதிகாரம் அவர்களுக்கு உண்டு.)
2) இவரின் குடும்பத்தை தொடர்பு கொள்வது
3) Facebook நிறுவனத்திடம் முறையிடுவது .
இதில் முதலில் உங்கள் எல்லோரின் உதவியுடனும் அவர் வேலை செய்ததாக சொன்ன விமான நிலையத்துடன் தொடர்பு கொண்டதில் அவர் அங்கு நேரடியாக வேலை செய்யவில்லை என தெரிந்து கொண்டோம். இருந்தாலும் விமான நிலையம் Facebook நிறுவனத்திற்கு முறைப்பாடு செய்தது. தங்கள் பெயரை அவதூறாக முகநூலில் பாவித்தமைக்கு சிவத்தை போலீஸிடமும் முறையிட்டது. இது முதல் வெற்றி. பின்னர் அவர் உண்மையாக வேலை செய்த Airbus நிறுவனதிடம் முறையிட்டோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக பதில் வந்தது. இரண்டவது வெற்றி.
நீங்கள் எல்லோரும் Facebook இடம் முறையிட்டதுடன், Airbus நிறுவனமும், விமான நிலையமும் முறையிட்டதை தொடர்ந்து, Facebook இவரை முடக்கியது. என்றாலும் இரண்டே நாட்களில் இன்னொரு ID திறந்து அவர் முகப்புத்தகம் வந்தது உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அதை அறிந்து Facebook நிறுவனத்தில் வேலை செய்யும் நண்பர் மூலம் மீண்டும் முறையிட்டோம். அவர் அமெரிக்கர். அவர் சிவத்தின் IP address முதல் கொண்டு , அவரின் கம்ப்யூட்டரில் இருந்து Facebook பக்கமே வர விடாத வகையில் சிவத்தை தடை செய்தார். சிவம் வெலவெலத்து போனார்.
"என்னடா இவங்கள் மோட்டு பயலுகள் எண்டு நினைச்சன், முடக்கி போட்டான்கள்" என்று அடுத்து அவர் புலம்ப ஆரம்பித்த இடம் Youtube.
இதற்கு இடையில் இவரின் முதல் மனைவியை யாரோ தொடர்பு கொண்டு இந்த வீடியோக்களை காட்ட, அவரது மனைவி நேரே சிவத்தின் வீட்டுக்கு போய் கோவை சரளா வடிவேலுவை போட்டு புரட்டி எடுத்ததை போல சிவத்தை புரட்டி எடுத்துள்ளார். சுமார் 7000 பேர் வாழும் பெர்லின் தமிழ் சமூகத்தில் அந்த வாரம் இந்த அடிதான் ஹாட் டாபிக். இதை சிவமே ஒரு youtube வீடியோவில் சொல்லி "பெருமை" பட்டார்.
சிவம் தனது நேரலைகளை இப்போது youtubeபில் தொடங்கினார். இவர் மீது வழக்கு தொடர்ந்த ஒரு இலங்கை தமிழ் அமைச்சரை போதையில் திட்டி தீர்த்தார். இப்போது நாம் தொடர்பு கொண்டது Google நிறுவனத்தை.
"எங்களுக்கு இந்த மொழி வீடியோக்களை பார்க்க ஆளில்லை, எனவே இப்போதைக்கு ஒன்றும் செய்ய முடியாது" என்று பதில் வந்தது.
அதற்கு நாம் "உங்கள் CEO சுந்தர் பிச்சை பேசும் மொழியிது. இதை சொல்ல உங்களுக்கு வெட்கமாய் இல்லை என்று கேட்டோம். சுந்தருக்கு நேரடியா ட்வீட் செய்வேன்" என்று பயமுறுத்தி ஒரு மணி நேரத்தில் அவரது அவதூறான வீடியோக்களை கூகிள் நிறுவனம் நீக்கியது. (தற்போதை அந்த வீடியோக்கள் மட்டும் நீக்கப்பட்டுள்ளன)
அதற்கு நாம் "உங்கள் CEO சுந்தர் பிச்சை பேசும் மொழியிது. இதை சொல்ல உங்களுக்கு வெட்கமாய் இல்லை என்று கேட்டோம். சுந்தருக்கு நேரடியா ட்வீட் செய்வேன்" என்று பயமுறுத்தி ஒரு மணி நேரத்தில் அவரது அவதூறான வீடியோக்களை கூகிள் நிறுவனம் நீக்கியது. (தற்போதை அந்த வீடியோக்கள் மட்டும் நீக்கப்பட்டுள்ளன)
அடுத்து சிவத்தின் குடும்பத்தை தொடர்பு கொண்டோம். அவரது நியூயோர்க் தம்பி மதம் மாறியது சிவத்துக்கு பிடிக்காமல் பேச்சுவார்த்தை இல்லை என தெரிந்துகொண்டோம். அவரையும் தொந்தரவு செய்யாமல் விட்டுவிட்டோம். இன்னும் சிலரை தொடர்பு கொண்டு அவரது அம்மாவுக்கு சிவம் இப்படி மன நோயினால் படும் அவஸ்தை தெரியுமா என விசாரித்தோம். ஒட்டுமொத்தமாக "அவனால் இதுவரை பட்டது போதும், தயவு செய்து எங்களை ஒன்றும் கேட்காதீர்கள். அவன் ஒரு சாத்தான்." என்று பதில் வந்தது.
அவர்கள் குடும்பத்தின் சோக நிலையை பாவித்து இவரின் அம்மாவையும் மதம் மாற்றி, மதம் மாறாத சிவம் ஒரு சாத்தான் என்று அவர் அம்மா வாயினாலேயே சொல்ல வைத்துவிட்டார்கள் சில "பாவிகள்" என அறிந்தோம். தன் அம்மாவே "சாத்தான்" என்று கூறியது இவரின் ஆழ் மனதை மிகவும் தாக்கி இருப்பதை பல வீடியோக்கள் மூலம் அறிந்தோம்.
இவையெல்லாம் நடந்து கொண்டு இருக்கும்போதுதான் ஒரு நாள் சிவம் திடீரென ஒரு வீடியோவில் கண்ணீர் விட்டு அழுதார். விசாரித்து பார்த்ததில், அவரின் கடைசி மகன் சிவத்தின் நடவடிக்கைகளால் மனநிலை பாதிக்கப்பட்டு ஒரு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டது தெரியவந்தது. அந்த பிள்ளையுடன் மிகவும் பாசமாக இருப்பாராம் சிவம். சிவம் போதைக்கு அடிமையாகியதை அந்த குழந்தையால் தாங்கி கொள்ள முடியவில்லை என அறிந்து கலங்கி போனோம். குடும்பமும் கைவிட்டு, நண்பர்களும் கைவிட்டு, தாயும் சகோதர்களும் "ஒரு சாத்தான் என" கைவிட்டு, இன்று ஒரு வயதான கிழவனுடன் தன் நேரத்தை கழிக்கிறார் சிவம். இயற்கையை நேசித்து, வணங்கி, போரின் தாக்கம் மற்றும் குடும்ப சூழல்களால் தன் ஊர், மதம், மொழி மற்றும் இனம் மேல் உள்ள அதீத பாசம் பெரிதாகி Narcissistic Personality Disorder எனும் நோயிற்கு அடிமையாகி இருக்கும் சிவத்துக்கு இன்று தேவையாக இருப்பது இன்று அன்பும் சிகிச்சையும். அவரை துரத்தி பழி வாங்க கிளம்பிய நான் இன்று ஒரு இனம் புரியாத குற்ற உணர்ச்சியுடன் இந்தப் இந்த பதிவை முடிக்கிறேன்.
பி.கு: அவரின் நண்பர் மூலம் சிவத்திற்கு டிரீட்மென்ட் ஏற்பாடு செய்ய முயற்சிக்கிறோம். ஏற்பார் என்ற நம்பிக்கையோடு.
இந்தப் பிரச்சினையில் மலையக இளைஞர்கள் சமூகத்தின் மீது வைத்துள்ள பற்றையும், அக்கறையையும் பார்க்க முடிந்தது. ஒன்றிணைந்தால் எதனையும் வெற்றிகொள்ளலாம் என்ற மறைமுகமான செய்தியையும் வெளிக்காட்டியது.
(கச்சா சிவம் விவகாரத்தில் ஆரம்பம் முதலே என்ன சட்டபூர்வமான, ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கலாம்? எப்படிக் கையாளலாம்? என்று ஆலோசனை வழங்கி வந்ததுடன், இதற்காக பெரும் நேரத்தையும், முயற்சிகளையும் மேற்கொண்ட ஒருவரினால் இந்த பதிவு எழுதி எமக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment