Wednesday, 23 August 2017

நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற எண்ணிக்கை அதிகரிப்பு ,,,

நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற எண்ணிக்கையை கூட்டுவதற்கான போராட்டம் வெற்றி என்கிறார் அமைச்சர் மனோ!
வெற்றி என்ற செய்திக்கு சபாஷ் சொல்லும் அதேவேளை, இது நடைமுறையில் வரும்வரை விழிப்பாக இருப்போம்.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற எண்ணிக்கையை கூட்டுவதற்கான தமிழ் முற்போக்கு கூட்டணியின் போராட்டம் வெற்றி அடைந்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தனது முகநூலில் அறிவித்துள்ளார்.
உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் அவரது அமைச்சில் இன்று (23) பிற்பகல் நடத்திய சந்திப்பின் போது இதற்கான உடன்பாடு ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை நாடு திரும்பிய தன்னிடம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கோரிக்கையை ஏற்று பிரதேச சபைகளின் எண்ணிக்கையை கூட்டும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் அறிவுறுத்தியதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தன்னிடம் தெரிவித்ததாகவும் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
இது தொடர்பான விபரக்கோப்பை அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளித்துள்ளதாகவும் அவர் 

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...