Wednesday, 23 August 2017

நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகள் ஐந்து (05), பன்னிரெண்டு (12) ஆகிறது.

mano.ganesan. முப்பது வருட அநீதியை, தமிழ் முற்போக்கு கூட்டணி, இன்று துடைத்து எறிகிறது> இந்த நொடியில் என் மனதில்…
வடகிழக்குக்கு வெளியே தமிழர் அதிகம் வாழும் ஐந்து (05), பன்னிரெண்டு (12) ஆகிறது.உள்ளன. இந்த தொகை முதற்கட்டமாக பன்னிரெண்டு (12) பிரதேச சபைகளாக உயர்த்தப்பட வேண்டும் என்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் அழுத்த கோரிக்கை இன்று நிறைவேறுகிறது.
இன்றுள்ள அம்பகமுவை பிரதேச சபை, நோர்வுட், மஸ்கெலியா, அம்பகமுவை என்ற மூன்று சபைகளாகவும், இன்றுள்ள நுவரெலியா பிரதேச சபை, தலவாக்கலை, அக்கரைபத்தனை, நுவரெலியா என்ற மூன்று சபைகளாகவும், இன்றுள்ள வலப்பனை பிரதேச சபை, நில்தாயின்னை, வலப்பனை என்ற இரண்டு சபைகளாகவும், இன்றுள்ள கொத்மலை பிரதேச சபை, கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு என்ற இரண்டு சபைகளாகவும், இன்றுள்ள ஹங்குரன்கத்தை பிரதேச சபை, மதுரட்டை, ஹங்குரன்கத்தை என்ற இரண்டு சபைகளாகவும் மாறுகின்றன.< அதாவது, ஐந்து (05), பன்னிரெண்டு (12) ஆகிறது.
1987ம் வருடம் அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்ட 13ம் திருத்தம் மூலமாக பிரதேச சபைகள் அமைக்கப்பட்டன. பிரதேச சபை என்பதுதான், அதிகாரப்பரவலாக்கலின் அடிப்படை அலகு. அவற்றை அவ்வந்த பிரதேச மக்கள் தம் சொந்த வாக்குகளால் தெரிவு செய்யும் பிரதிநிதிகள் மூலமாக நிர்வகிக்கும் அரசியல் அதிகார பகிர்வை பெறுகின்றார்கள்.
பிரதேச சபைகள் மூலமாகவே, அரசாங்கத்தின் நிதி வளங்கள், அபிவிருத்தி திட்டங்கள், சமோக நலத்திட்டங்கள் ஆகியன மக்களை, குறிப்பாக பின்தங்கிய கிராமிய பிரதேசங்களை சென்று அடைகின்றன.


இந்நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் எட்டாயிரம் (8,000) பேருக்குகூட ஒரு தனியான பிரதேச சபை அமைக்கப்பட்டிருந்த போது, இரண்டு இலட்சம் (200, 000) பேருக்கு மேல் ஒரு சபை என்ற அகோர அநீதி, வடகிழக்குக்கு வெளியே தமிழர் அதிகம் வாழும் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் இழைக்கப்பட்டிருந்தது.
அதாவது, அன்று (1987) முதல், இன்று (2017) வரை முப்பது (30) வருடங்களாக, இந்த அநீதி இழைக்கப்பட்டிருந்தது. முப்பது வருடங்களாக இருந்து வந்த அரசியல் தலைமைகளின் கண்களில் தட்டுப்படாத இந்த பாரபட்சம், அகோர அநீதி, தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற புதிய தலைமுறை தமிழ் தலைமையின் மூன்றாம் கண்ணுக்கு புலப்பட்டது.
ஆகவே, இன்று இந்த முப்பது வருட அநீதியை, தமிழ் முற்போக்கு கூட்டணி துடைத்து எறிகிறது.
இது முதற்கட்டம்தான். அடுத்த கட்டமாக, இந்த பிரதேச சபை எண்ணிக்கை இன்னமும் உயர்த்தப்படும். அதுமட்டுமல்ல, தெரிவு செய்யப்பட்ட பல சிறு நகரங்கள் நகரசபைகளாகவும், ஹட்டன்-டிக்கோயா, தலவாக்கலை-லிந்துல்ல ஆகிய இரண்டு நகரசபைகள், மாநகரசபைகளாகவும் தரமுயர்த்தப்படும்.
இதே பார்வை, நமது மக்கள் வாழும் ஏனைய மாவட்டங்களை நோக்கியும் திட்டமிட்டு முன்கொண்டு செல்லப்படும். இவை அனைத்துக்குமான தூரப்பார்வையும், ஆளுமையும், தலைமையும் எங்களிடம் உண்டு.

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...