தினகரன் : பணம் தனக்கு தெரியாமல் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று (06) முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவில் தனியார் வங்கி ஒன்றில், நபர் ஒருவர் 22 இலட்சத்து 250 ரூபாவை (ரூபா 2,200,250) வைப்பிலிட்டுள்ளார்.
சி. ஜெகராசா என்பவர் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லும்பொருட்டு, தனது வங்கி வைப்பை காண்பிக்கும் பொருட்டு, புதிய வங்கிக் கணக்கு ஒன்றை ஆரம்பித்து, அதில் இவ்வாறு பணத்தை வைப்பிலிட்டுள்ளார்.
அதன் பின்னர், வெளிநாட்டு சுற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும் முகவர் ஒருவரிடம் தனது வங்கி புத்தகம், கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை கையளித்து, பயண ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு ஒப்படைத்துள்ளார்.
இதனையடுத்து, முகவருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியபோதிலும் அவரை தொடர்பு கொள்ள முடியாது போயுள்ளது.
சந்தேகம் ஏற்பட்டு கடந்த புதன்கிழமை (05) வங்கிக்கணக்கை சரிபார்த்தபோது, அவரது வங்கி கணக்கில் இருந்து ரூபா 20 இலட்சம் நாரம்மல பகுதியிலுள்ள குறித்த வங்கியின் கிளையிலிருந்து கடந்த 29ஆம் திகதி பணம் மீளப்பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளமை வாடிக்கையாளருக்கு தெரியவந்துள்ளது.
இதையடுத்து வவுனியாவில் உள்ள வங்கி முகாமையாளரின் உதவியுடன், வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வங்கி புத்தகத்தினை வைத்து குறித்த முகவரால், பணம் மீளப்பெறப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தபுரன்)
Subscribe to:
Post Comments (Atom)
Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்
கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...

-
தேநீர் இலங்கையின் தேசிய பானம் என்றே கூறலாம். அந்தளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றிய ஒரு பானமாக தேநீர் காணப்படுகிறது. இது இலங்கைக்...
-
ஒரு விதேச பெண்ணாக இலங்கை வந்து இலங்கைப் பெண்களுக்காக (குறிப்பாக மலையகப் பெண்களுக்காக) வாழ்ந்து மடிந்த ஒரே ஒரு தமிழ்ப் பெண்ணைத் தான் நா...
-
பிரான்சிஸ் : ஹெலன்போற்றி தோட்டத்தில் ஓர் கலைக் குடும்பத்தில் பிறந்த பிரான்சிஸ் ஹெலன் அவர்களின் தந்தை சிறந்த நாடக ஆசிரியரும், கலைஞருமாவார...
No comments:
Post a Comment