Tuesday, 8 August 2017

வடக்கு ... ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் அனுமதிக்காத புத்தூர் கிராமம்

Mohana Dharshiny :வட கிழக்கு பிரதேசங்களில் சாதிய அடக்குமுறை அருகிவிட்டது என்போர் புத்தூர் கலைமதி கிராமத்திற்கு வந்து பார்க்கட்டும். இன்னும் ஒடுக்கப்பட்ட மக்களை கோயிலுக்குள் அனுமதிக்காத நிலைமை காணப்படுகின்றது. கலைமதி கிராமத்தில் அமைந்துள்ள ஞானவைரவர் கோயிலில் ஒடுக்கப்பட்ட மக்களை உள்நுழைய அனுமதிப்பதில்லை. 2000 ம் ஆண்டு காவடி தூக்கச் சென்ற மக்களை எச்சரித்து திருப்பி அனுப்பினர் ஆதிக்கசாதி பக்தர்கள். ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் காவடியை தூக்கிக்கொண்டு வெளியேறியதும் மஞ்சள்நீர் , சாணி தெளித்து கோயிலை "சுத்தப்" படுத்தி, விசேட பரிகார பூஜைகள் செய்ததாக அக்கிராம மக்கள் சொல்கின்றனர். அன்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பூட்டப்பட்ட வாயிற்கதவு இன்னும் திறக்கவில்லை. கோயில் கிணற்றில் தண்ணீர் எடுக்க தாழ்த்த ப்பட்ட சாதியினரை அனுமதிப்பதில்லை. அவர்களே வெளியிலுள்ள தொட்டியில் நீரை நிரப்பி வைத்தபின்னர் , தாழ்த்தப்பட்ட மக்கள் தொட்டியிலிருந்தே நீர் எடுக்க முடியும். தமிழ்தேசியவாதிகள் கண்களுக்கு இதெல்லாம் தெரிவதில்லை

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...